குழந்தையாய்... சிறுமியாய்... குமரியாய்... மனைவியாய்... தாய்மையை உணர்ந்தும் வைரல் கவிதை.! - Seithipunal
Seithipunal


உலகில் பல விதமான ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும், பல வன்மங்கள் நிறைந்த சம்பவங்கள் நடைபெற்று முடிந்தாலும், நடந்து கொண்டு இருந்தாலும் தாய்மை என்ற ஒற்றை உணர்வில் அனைவரும் உறுதியாக இருப்போம்.

பெண்கள் பல காலகட்டத்தில் பல பெயர்கள் கொண்ட பந்தத்துடன் நம்மிடையே பழகி வருகின்றனர். அவர்களின் வலி மற்றும் தாய்மை உணர்வை வெளிப்படுத்தும் விதமாக இணையத்தில் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. அந்த பதிவில், " ஆணினத்திற்கே கிடைக்காத பாக்கியம் பெண்னினம் மட்டுமே பெற்று வந்த பரிசு!

ஒரு கவளம் சோற்றைக் கூட - அதிகமாய் உட்கொள்ளாத வயிறு..!

ஒரு உயிரையே உள்ளே வளரச் செய்யும் உலக அதிசயம்..!

எவ்வளவுதான் விஞ்ஞான வசதிகள் வந்தாலும் கருவறையை விடப் பாதுகாப்பான அறையை குழந்தைக்கு தர யாருக்கு முடியும்..?

இறைவனின் வல்லமைக்கு இதனை விட சான்று வேண்டுமா..?

பத்து நிமிடம் சுமந்தால் தோள் கனத்துப் போகிறது. பத்து மாதம் சுமந்தாலும் கருவறை கனப்பதில்லை..!

வலி என்றாலே உயிர் போகிறது என்பார்கள் - ஆனால் இந்த வலியில் மட்டுமே உயிர் வரும்..!

குழந்தையாய்... சிறுமியாய்... குமரியாய்... மனைவியாய் வளரும் உறவு தாய்மையில்தான் தன்னிறைவு பெறுகிறது..!

கொஞ்சும் போது தனக்கும் ஆனந்தம் வருவதாலேயே தகப்பன் கூட குழந்தையை கொஞ்சுவது சாத்தியம்…!

தாய்மையின் மகத்துவத்தை எத்தனை தத்துவமாயும் தத்ரூபமாயும் சொல்லலாம் எல்லாவற்றையும் விட தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கிறது " என்று கூறப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Mother Carrying Love about Feel Tamil Poem


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->