ரஜினிகாந்துக்கு பூரண ஆதரவு.! கலைஞர் வாரிசின் அறிவிப்பால் கொந்தளிப்பில் ஸ்டாலின்.!  - Seithipunal
Seithipunal


சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் அரசியல் வருகையை அவரின் ரசிகர்கள் மட்டுமல்லாது அனைத்து கட்சி தலைவர்களும் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர். ஒருசிலர்  இவர் அரசியல் பிரவேசம் செய்தால் நாம் காலியாகிவிடுவோமோ என்ற பீதியில் உள்ளனர். பலபேர் அவர் கட்சி ஆரம்பித்தால் உடனே அதில் ஐக்கியமாக காத்திருக்கின்றனர். 

இந்த நிலையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகனும், திமுகவில் இருந்து தற்போதைய திமுக தலைவர் ஸ்டாலினால் ஓரங்கட்டப்பட்ட அவருடைய அண்ணனுமாகிய மு.க. அழகிரி தற்போது ரஜினிகாந்தின் அரசியல் வருகையை எதிர்ப்பார்த்து காத்திருக்கிறார். காரணம் ரஜினிகாந்தின் மீது அவர் கொண்டுள்ள நட்பு. 

தன் நன்பனின் அரசியல் பிரவேசம் எக்காரணம் கொண்டும் வீணாகிவிடக்கூடாது என மிகத்தெளிவாக உள்ளார் மு.க. அழகிரி. எனவே, தற்போது பிரபலங்கள் பலர் ஊரடங்கு காரணமாக வீட்டைவிட்டு வெளியே செல்லாமல் உள்ளனர். இந்த நேரத்தில் தான் மு.க அழகிரி ரஜினிகாந்தை தொடர்புகொண்டு பேசியிருக்கிறார். உங்களுக்கு எல்லாவகையிலும் நான் உதவ தயாராக இருக்கிறேன். மதுரை சுற்றுவட்டாரப்பகுதியில் இருந்து உதவ தயார் என்று உறுதி அளித்திருப்பதாக நம்பத்தகுந்த தகவல் வட்டாரங்கள் தெரிவித்து உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mk alagiri supports to rajini


கருத்துக் கணிப்பு

முதல்வர் திடீரென மாவட்டங்களுக்கு சென்று வருவது..
கருத்துக் கணிப்பு

முதல்வர் திடீரென மாவட்டங்களுக்கு சென்று வருவது..
Seithipunal