ஆன்லைனில் இதை ஆர்டர் செய்ய போறிங்களா? உஷார்.! FLIPCART-ஆல் ஏமாந்த கைதிப்பட இசையமைப்பாளர்.!  - Seithipunal
Seithipunal


பிரபல இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் ஆன்லைனில் ஆப்பிள் வாட்ச் ஆர்டர் செய்த பொழுது, வெறும் கல்லை கொடுத்து தன்னை ஏமாற்றிவிட்டார்கள் என்று குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

'விக்ரம் வேதா', 'இரவுக்கு ஆயிரம் கண்கள்', 'புரியாத புதிர்', 'கைதி', 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' போன்ற பல சூப்பர் ஹிட் படங்களுக்கு தன்னுடைய இசையால் அலங்கரித்த இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் தனது சமூகவலைதள பக்கத்தில் தான் ப்ளிப்கார்ட் மூலம் ஏமாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தனது அன்பு சகோதரனுக்கு பிறந்த நாள் பரிசாக கொடுக்க ஆப்பிள் வாட்ச் ஒன்றை ப்ளிப்கார்ட்டில் தான் ஆர்டர் செய்ததாகவும், ஆனால், அதை வாங்கி பார்த்தபோது அதில் கற்களை அழகாக வைத்து அனுப்பி இருந்தததாகவும் கூறியுள்ளார். 

மேலேயும், இதுகுறித்து ஃபிளிப்கார்ட் நிறுவனத்திடம் தான் புகார் அளித்த போது எனது புகாரை அவர்கள் நிராகரித்து, பணத்தை திருப்பித் தர முடியாது என்று கூறிவிட்டதாகவும், எனவே, இனி எதையும் ப்ளிப்கார்ட் நிறுவனத்திடம் இருந்து வாங்க வேண்டாம் என்றும், அவர்கள் ஏமாற்றுக்காரர்கள்" என்று சாம்.சி.எஸ் கூறியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

kadhi music director cheated by flipcart


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?


செய்திகள்



Seithipunal
--> -->