ஆபர்களை அள்ளித்தெளிக்கும் போலி ஷாப்பிங் வெப்சைட்.. மக்களே உஷார்.! - Seithipunal
Seithipunal


இணையத்தில் ஆசைகளை தூண்டும் வகையில் ஆபர்களை அள்ளிக்கொடுக்கும் போலியான வெப்சைட்டுகள் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. 

இன்றுள்ள தொழில்நுட்ப உலகில் நாளுக்கு நாள் பல மாற்றங்கள் நடைபெற்று வருகிறது. இணையவழியில் நாம் கண்டிராத வளர்ச்சியையும் இப்போது கண்டு வருகிறோம். இந்த வளர்ச்சி அபரிமிதமாக நம்மிடையே அறிமுகமாகி வரவேற்பு பெற்று, அது இல்லாமல் நாம் இல்லை என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. 

இப்போது வீட்டில் இருந்தபடியே, வீட்டிற்கு தேவையான காய்கறிகள், உணவுப் பொருட்கள், நமக்கு தேவையான ஆடைகள், அலங்காரப் பொருட்கள் என அனைத்தையும் ஆன்லைன் மூலமாகவே வாங்கி வருகிறோம். ஆனால், இவற்றில் பல போலியான இணையதளங்களும் இருக்கிறது. புகழ்பெற்ற சில நிறுவனங்களை போலவே விளம்பரம் செய்து, இணையங்களில் உலா வரும் இந்த இணையப்பக்கங்களில் பல்வேறு விதமான ஆபர்களை வழங்கி மக்களை கவர்ந்து நூதன மோசடி செய்து வருகின்றனர். 

ரூபாய் 8000 மதிப்புள்ள பொருளுக்கு 80 விழுக்காடு ஆஃபர் என்று கூறி, அந்த பொருளை ரூ.500 மற்றும் ரூ.ஆயிரத்திற்கு தருவதாகவும், குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு மற்றும் குறித்த நேரத்தில் மட்டுமே இது கிடைக்கும் என்றும் பதிவிடுகின்றனர். ரூ.8 ஆயிரம் மதிப்புள்ள பொருள் மலிவான விலைக்கு கிடைக்கிறது என்பதால், இதனை ஆசையில் வாங்க வரும் பலருக்கும் இறுதியில் ஏமாற்றமே கிடைக்கும். இதனை ஆர்டர் செய்பவர்களுக்கு பணமும் வராது, பொருளும் வராது என்பதே உண்மை. 

சில நாட்கள் கழித்து அந்த இணைய பக்கத்தை மீண்டும் சென்று சோதித்தால் அது போலியானது என்பது உறுதியாகும். அதிலுள்ள தொலைபேசி எண், இ-மெயில் முகவரி என அனைத்துமே போலியானது. ஒரு நபருக்கு ஆயிரம் ரூபாய் குறைவானது என்றாலும், இதனைப் போன்று பல்வேறு நபர்கள் ஆடர் செய்வதால் நொடிப்பொழுதில் போலி இணையப்பக்கத்தை நடத்தும் நபர் இலட்சக்கணக்கில் அல்லது கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டிக் கொண்டு தப்பி செல்கிறார். 

இது போன்ற ஆன்லைன் ஷாப்பிங் செய்வதற்கு முன்னதாக உண்மையான விற்பனைதளமா? என்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும், இது போன்ற சமயங்களில் சந்தேகம் இருக்கும் பட்சத்தில், கேஷ் ஆன் டெலிவரி ஆப்ஷனை உபயோகம் செய்யலாம். மேலும், இதனால் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் மத்திய அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் www.consumerhelpline.gov.in என்ற பக்கத்தில் சென்று புகார் தெரிவிக்கலாம் அல்லது சைபர்கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Fake Online Website and Complaint Rules Tamil


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மூன்றாவது ஒரு கூட்டணி உருவாகினால்., யாருக்கு பாதிப்பு.,?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மூன்றாவது ஒரு கூட்டணி உருவாகினால்., யாருக்கு பாதிப்பு.,?
Seithipunal