நகரமயமாதலின் விளைவுகளால் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்.. வைரலாகும் பதிவு.!! - Seithipunal
Seithipunal


வீட்டில் இருக்கும் பெற்றோர்களிடமும், இல்லத்தை சுற்றியுள்ள நண்பர்களிடமும் முகம் கொடுத்துக்கூட பேசாமல் இன்றைய காலங்கள் கழிந்து வருகிறது. இணையதளத்தின் தாக்கத்தால் நாம் பல மாற்றத்தை சந்தித்துள்ளோம். இதுகுறித்த சிறிய பதிவானது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இது குறித்த ட்விட்டர் பதிவில், "நகரமயமாதலின் விளைவுகள்" என்ற தலைப்புடன், பழையசோறும் கேப்பக்களியும் எப்பவோ இங்கு மாண்டு போயாச்சு...!  ஆனா சூடு பண்ணத ஆவி பறக்க கொண்டு வந்து delivery பண்ணும் traditional trendஆகி ரொம்ப நாளாச்சு...! 

அஞ்சாங்கல்லும் கண்ணாம்பூச்சியும் ஆடிய அறும்புகளெல்லாம் காணாமயே போயாச்சு...! ஆனா இன்றைய சிறுசுங்க எல்லாம் அடுக்குமாடியில ஆண்ட்ராய்டுக்குள்ளேயே ஒளிஞ்சு போயாச்சு...! 

அரைகால் சட்டை எல்லாம் அழகு ஜீனாக மாறி போயாச்சு..!  ஆனா பாவாடை தாவணி பாதியா குறைஞ்சு அதுவே Fashionஆகி போயாச்சு...! அட நிழலுக்கு கூட நிம்மதியா நிக்க மரமில்லாம மனம்வாடி போயாச்சு...!

ஆனா AC வெச்ச கார் என்பதே இப்போ ரொம்பவே சாதாரணமாகி போயாச்சு...! பர்லாங்கு பாக்காம  நடந்து போய் சொந்தபந்தத்தை பாத்த காலமெல்லாம் மலையேறி போயாச்சு...! ஆனா இரண்டாவது மாடிக்கே Liftல போற  அளவுக்கு வயசாகி போயாச்சு...! ஆஹா சொன்ன வளர்ச்சி எல்லாம் இப்போ ஐயையோ சொல்லறது என்னவோ ரொம்பவே புதுசாச்சு...! என்று வைரலாகி வருகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

defects of Urbanization twitter trending post


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தற்போது வழங்கப்பட்டுள்ள தளர்வுகள்..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தற்போது வழங்கப்பட்டுள்ள தளர்வுகள்..
Seithipunal