கரூர்ல 41 பேர் செத்துப் போயிட்டாங்க..கவலை கொஞ்சம்கூட இல்ல..மீனவ பொண்ணு சுபி-க்கு TVK ரசிகர்கள் சப்போர்ட்! நெட்டிசன்கள் ரியாக்ஷன்!
41 people died in Karur no worries at allTVK fans support Meenava Ponnu Subhi Netizens react
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 தற்போது சூடேறி நடந்து வரும் நிலையில், போட்டியாளர்களில் ஒருவரான மீனவ பொண்ணு சுபிக்ஷா குமார், தற்போது சமூக வலைதளங்களில் பெரிய விவாதமாக மாறியுள்ளார்.
சோஷியல் மீடியாவில், விஜய் ரசிகர்களும் தவெக (TVK) தொண்டர்களும் “சுபி-க்கு வோட் பண்ணுங்க, சப்போர்ட் பண்ணுங்க” என்று டிரெண்ட் செய்து வருகிறார்கள். ஆனால் இதை பார்த்த சில நெட்டிசன்கள் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இது ஏன் தெரியுமா?சமீபத்தில் கரூரில் விஜய் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக குழந்தைகள், பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்த துயரம் இன்னும் தமிழ்நாட்டை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. அப்படி ஒரு சூழ்நிலையில், TVK கட்சியை சேர்ந்தவருக்கு சப்போர்ட் பண்ணுவது வெட்கமில்லையா? என சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பிக் பாஸ் வீட்டில் நுழைந்த உடனே, “நான் ஒரு மீனவ பொண்ணு!” என்று பெருமையாக சொல்லிய சுபிக்ஷா, தன்னுடைய இயல்பான பாணியால் பலரது ஆதரவை பெற்றுவந்தாலும், இப்போது அரசியல் நிறம் புகுந்த ஆதரவால் விவாதம் வெடித்துள்ளது.
சோஷியல் மீடியாவில் சிலர், “இவங்க மீனவ பொண்ணா இல்ல TVK பொண்ணா?” என்று கேட்கிறார்கள். அதே சமயம், “அவங்க திறமையைக் கொண்டு விளையாடட்டும்; அரசியல் அடிப்படையிலான வோட்டிங்க் வேண்டாம்” என மற்றொரு பிரிவு வலியுறுத்துகிறது.
சுபிக்ஷா, சமூக வலைதளங்களில் ஏற்கனவே பிரபலமான இன்ஃப்ளூயன்சர். “மீனவ பொண்ணு சுபி” என்ற பெயரில் கடல் வாழ்வை பதிவு செய்யும் முதல் கடல் வ்ளாகர் (Sea Vlogger) என்ற அடையாளத்துடன் புகழ் பெற்றவர். பல நிறுவனங்களின் விளம்பரங்களிலும், விஜய் டிவி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார்.
சிறு வயதில் அப்பாவுடன் கடலில் மீன்பிடிக்கச் சென்று, வாழ்க்கை அனுபவங்களைப் பகிர்ந்த சுபி, பிக் பாஸ் வீட்டில் தனது இயல்பான பேச்சால் விஜய் சேதுபதி உட்பட பலரது மனதையும் கவர்ந்துள்ளார்.
ஆனால் இப்போது, “மீனவ பொண்ணு சுபி” என்பதிலிருந்து “TVK பொண்ணு சுபி” என ஹேஷ்டேக்குகள் மாறியிருக்கின்றன. இதை பார்த்த நெட்டிசன்களில் சிலர், “கரூரில் நடந்த துயரத்துக்குப் பிறகும் இப்படி ப்ரோமோஷன் பண்ணுறாங்க! வெட்கமில்லையா?” என கடும் விமர்சனம் எழுப்பியுள்ளனர்.
அதே நேரத்தில் சிலர், “அவங்க எந்த கட்சியோ, பின்னணியோ பார்க்காதீங்க — பிக் பாஸ் வீட்டில் எப்படி விளையாடுறாங்கனு மட்டும் பாருங்க!” என்று சுபிக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.
தற்போது சமூக வலைதளங்களில் #Subiksha, #MeenavaPonnuSubi, #TVKBiggBoss9 போன்ற ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகி வருகின்றன.சுபி பிக் பாஸ் வீட்டில் எத்தனை நாட்கள் தாக்குப் பிடிக்கிறார்?அவங்க திறமையாலா, அரசியல் ஆதரவாலா — அதைக் கண்டுபிடிக்க ரசிகர்கள் காத்திருக்கின்றனர்!
English Summary
41 people died in Karur no worries at allTVK fans support Meenava Ponnu Subhi Netizens react