திடுக்!!! மனைவியின் தகாத உறவால் விஷம் குடித்த நகைக்கடை ஊழியர்...! நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


கேரளா பாலக்காடு மாவட்டம் குழல்மந்தம் நொச்சுள்ளி பகுதியை சேர்ந்த 40 வயது நகைக்கடை ஊழியரான மனோஜ்குமார் என்பவர். இவருடைய மனைவி சித்ரா என்பவர், குழல்மந்தம் மகாத்மா காந்தி சர்வீஸ் கூட்டுறவு சங்கத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார்.

இதனிடையே, சித்ராவுக்கும், சங்க தலைவரான விஜீஸ் சஹதேவனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இருவரும்,நெருங்கி பழகியதாக தெரிகிறது.

இந்த விஷயம் மனோஜ்குமாருக்கு தெரியவந்ததும் தனது மனைவியை கண்டித்துள்ளார்.ஆனாலும், மனைவி விஜீஸ் சஹதேவனுடன் தொடர்ந்து பழகியுள்ளார்.இதனால் மனவேதனை அடைந்த மனோஜ்குமார் சம்பவத்தன்று விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார்.பிறகு அவர் மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இருப்பினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.மேலும்,  மனோஜ்குமார் சாவில் சந்தேகம் உள்ளதாக குழல்மந்தம் காவலில் குடும்பத்தினர் புகாரளித்தனர்.

அந்த புகாரில்,'விவாகரத்து கோர சித்ரா, விஜீஸ் சஹதேவனுடன் சேர்ந்து மனோஜ்குமாரிடம் பணம் கேட்டும், மிரட்டியும் வந்ததாக குற்றம்சாட்டினர்'. இதுதொடர்பாக காவலர்கள் வழக்குப்பதிவு செய்து, மனோஜ்குமார் எழுதிய கடிதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

jewelry store employee drank poison due to his wifes inappropriate relationship What happened


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->