மதுரை | பள்ளி மாணவியை காதல் போர்வையில், கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த நாடக காதல் குரூப்ஸ்!  - Seithipunal
Seithipunal


காதலிப்பதாக கூறி, பிளஸ் 1 மாணவியை ஏமாற்றி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த நாடக காதலன் உள்ளிட்ட 3 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதுரை சேர்ந்த கார்த்திக் என்ற நாடக காதலன், பதினொன்றாம் வகுப்பு பள்ளி மாணவியை காதல் போர்வையில் ஏமாற்றி, பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக பாதிக்கப்பட்ட பள்ளி மாணவி அளித்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மதுரை கீழத்துரை அருகே ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு பள்ளி மாணவியை அழைத்துச் சென்ற நாடக காதலன் கார்த்திக் மற்றும் அவரின் நண்பர்கள், மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பாதிக்கப்பட்ட பள்ளி மாணவி தனது பெற்றோரிடம் தெரிவிக்கவே, திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அவர்கள் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், கார்த்திக் மற்றும் அவனின் நண்பர்கள் ஆதித்யா, ஹரிதாஸ் உள்ளிட்ட மூன்று பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

drama lover arrest madurai


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?
Seithipunal
--> -->