நம்பி வந்த பெண்.. நடுரோட்டில்.. காரியம் முடிந்ததும் எஸ்கேப்..! தவிக்கும் இளம்பெண்.!  - Seithipunal
Seithipunal


தன்னை நம்பி வந்த பெண்ணை திருமணம் செய்து 3 மாதம் கற்பமானதும், நடுரோட்டில் கழட்டிவிட்டு ஓடிய கணவனை கண்டுபிடித்து கொடுக்க சொல்லி இளம்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

வேலூர் மாவட்டத்தில் இருக்கும் திருப்பத்தூர் அருகே பொம்மிக்குப்பம் என்ற பகுதியை சேர்ந்த செல்வராஜ் மகன் அன்புமணி(22) இவர் டிரைவராக பணியாற்றி வந்துள்ளார். அன்புமணி அதே பகுதியைச் சேர்ந்த சிவரஞ்சனி(22) என்ற பெண்ணை ஒரு வருடமாக வீட்டிற்கு தெரியாமல் காதலித்து வந்துள்ளார்.

கடந்த 2018 ஜனவரியில் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். அதன் பின்னர் கணவரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே வற்புறுத்தி சார்பதிவாளர் அலுவலகத்தில் திருமணத்தைப் பதிவு செய்து கொண்டார். இந்த நிலையில், அன்புமணி வீட்டில் எதிர்ப்பு அதிகரிக்கவே இருவரும் வீட்டை விட்டு வெளியேறி அதே பகுதியில் வேறு ஒரு வீட்டில் வாடகைக்கு குடியேறினர்.

சிவரஞ்சனி கருவுற்று மூன்று மாதமான நிலையில், அவருடைய தாய் வீட்டிலிருந்து ஐம்பதாயிரம் வாங்கி வரவேண்டும் எனக் கூறி அவரை துன்புறுத்தியுள்ளார். சிவரஞ்சனியும் சென்று பணத்தை கேட்க அவர்கள் நகையை அடமானம் வைத்து 20 ஆயிரம் தருகிறேன் என கூறி உள்ளனர். ஆனால் எனக்கு 50 ஆயிரம் மொத்தமாக வேண்டும் எனக் கூறிவிட்டு அவர் பெங்களூருக்கு சென்று விட்டதாக தெரிகிறது.

வேறு திருமணம் செய்து வைப்பதாக அன்புமணி வீட்டில் கூறியதன் காரணமாக அவர் வெளியேறி விட்டார் என கூறப்படுகிறது. 3 மாத கர்ப்பிணியாக சிவரஞ்சனியை அன்புமணி விட்டு சென்றார். இதுவரை வரவில்லை. தற்போது சிவரஞ்சனிக்கு 7 மாத கைக்குழந்தை ஒன்று இருக்கின்றது.

உண்ண உணவின்றி அவதிப்பட்டு வருகிறார். காவல் நிலையத்தில் சிவரஞ்சனி, "தனது கணவருக்கு வேறு ஒரு திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும், தான் கைக்குழந்தையுடன் மிகவும் சிரமப்பட்டு வருவதன் காரணமாகவும் தன்னுடைய கணவரை கண்டுபிடித்து தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும்." என புகார் அளித்து இருக்கிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cheated boy in vellore


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->