ஆந்திராவில் கணவனுக்கு மூன்றாவது திருமணம் செய்து வைத்த மனைவிகள்!  - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலத்தில் பழங்குடி மக்கள் வசிக்கும் கிராமத்தில்  கடந்த ஜூன் 25-ஆம் தேதி இரண்டு மனைவிகள் சேர்ந்து, தனது கணவருக்கு மூன்றாவது திருமணம் செய்து வைத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

ஆந்திர மாநிலம், பேடாபயலு மண்டலத்துக்கு உட்பட்ட கிராமத்தில் வசித்து வருபவர் பண்டன்னா. இவருக்கு கடந்த 2000-ஆம் ஆண்டு சகேனி பார்வதம்மா என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.  

இவர்களுக்கு திருமணம் ஆகி 5 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாததால், பண்டன்னா கடந்த 2005-ஆம் ஆண்டு சகேனி அப்பளம்மாள் என்பவரை தனது முதல் மனைவியின் அனுமதியுடன் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, பண்டன்னா தனது இரண்டு மனைவிகளுடனும் ஒரே வீட்டில் மகிழ்ச்சியாக வசித்து வந்த நிலையில், கடந்த 2007-ஆம் ஆண்டு  பண்டன்னாவிற்கும் அவரது இரண்டாவது மனைவி சகேனி அப்பளம்மாளுக்கும் ஓர் ஆண் குழந்தை பிறந்துள்ளது. 

இதன் பின்னர், 17 வருடங்கள் கடந்தும் இரண்டாவதாக குழந்தை இல்லாததால், பண்டன்னா மூன்றாவது திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தார். இவரின் இந்த முடிவை அவரது இரண்டு மனைவிகளும் முழு சம்மதத்துடன் ஏற்றுக் கொண்டனர்.

இதனை தொடர்ந்து, பண்டன்னாவின் இரண்டு மனைவிகளும் தனது கணவரின் மூன்றாவது திருமணத்திற்காக பெண்  பார்த்தது மட்டுமில்லாமல் திருமணத்திற்கு வேண்டிய அனைத்து ஏற்பாடுகளையும் முன்னின்று செய்துள்ளனர். 

மேலும், அவர்கள் இருவரும் தனது கணவரின் மூன்றாவது திருமணத்திற்காக கிராம மக்களிடம் திருமண அழைப்பிதழ் கொடுப்பது மற்றும் அந்த கிராம் முழுவதும் திருமண போஸ்டர் ஓட்டுவது போன்ற அனைத்து வேலைகளையும் செய்துள்ளனர். இது பார்ப்பவர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த திருமணம் கடந்த மாதம் 25-ஆம் தேதி நடந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, பண்டன்னா தனது மூன்று மனைவிகள் மற்றும் ஒரு மகனுடன் ஒரே வீட்டில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றார். இவரின் இந்த திருமணம் குறித்த செய்திகள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Andhra 3rd marriage with 2 wife permission


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?
Seithipunal
--> -->