ஒரே நேரத்தில் இரு ஆண்களுடன் நெருக்கம்..! ஏற்பட்ட வாக்குவாதம்..அரங்கேறிய விபரீதம்.!  - Seithipunal
Seithipunal


சென்னையில் இருக்கும் பிரபல மருத்துவமனை ஒன்றில் வேலை பார்த்து வரும் ஒரு பெண்ணின் கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பாக உயிரிழந்து இருக்கின்றார். இதன் பின்னர் அந்த பெண் தான் வசிக்கும் பகுதியில் இருக்கும் ஐய்யப்பன் என்ற நபருடன் நெருக்கமாகி இருக்கின்றார்.

கடந்த சில மாதங்களாக அந்த பெண்ணின் நடவடிக்கைகளில் பலவிதமான மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கின்றது. இதனால் ஐயப்பன் அதிருப்தியடைந்து இருக்கின்றார். இதனை தொடர்ந்து பெண்ணை கவனித்த பொழுது மருத்துவமனையில் அவரோடு பழகும் ரவி என்பவருக்கும், அந்தப் பெண்ணுக்கும் தொடர்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இதனை தொடர்ந்து ஆத்திரமடைந்த ஐய்யப்பன் மருத்துவமனைக்கு இன்று அத்துமீறி நுழைந்து பணியில் இருந்த ரவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கின்றார். வாக்குவாதம் முற்றிய நிலையில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ரவியை வெட்ட ஆரம்பித்துள்ளார். 

இதன் காரணமாக மருத்துவமனையில் இருந்தவர்கள் அலறி அடித்து ஓட பதற்றமாக காவலர்கள் ஐய்யப்பனைக் கைது செய்தனர். இதில் படுகாயமடைந்த ரவி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கின்றார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

a girl love two boys at same time


கருத்துக் கணிப்பு

கரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருவதற்கு காரணமாக இருப்பது..
கருத்துக் கணிப்பு

கரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருவதற்கு காரணமாக இருப்பது..
Seithipunal