யூடியூபர் சவுக்கு சங்கர் கைது! சினிமாவை மிஞ்சும் த்ரிலிங்! லாட்ஜில் தங்கியிருந்த யூடியூபர் சவுக்கு சங்கர் கைதானது எப்படி?
YouTuber Savukku Shankar arrested A thriller that surpasses cinema How was YouTuber Savukku Shankar arrested while staying at the lodge
ஜாமீன் நிபந்தனைகளை மீறி தலைமறைவாக இருந்த யூடியூபர் மற்றும் அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கரை, சென்னை போலீசார் ஆந்திர மாநிலம் சித்தூரில் கைது செய்துள்ளனர்.
சினிமா தயாரிப்பாளரை மிரட்டி பணம் பறித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், கடந்த டிசம்பர் 13ஆம் தேதி ஆதம்பாக்கம் மற்றும் சைதாப்பேட்டை போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் உடல்நலக் காரணங்களை முன்வைத்து அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததைத் தொடர்ந்து, மார்ச் 25ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது.
ஆனால், ஜாமீன் நிபந்தனைகளை மீறி தொடர்ந்து யூடியூப் வீடியோக்களை வெளியிட்டு, விசாரணைக்கு ஒத்துழைக்காமல் இருந்ததாக போலீசார் குற்றம்சாட்டினர். இதையடுத்து, அவரது ஜாமீனை ரத்து செய்ய கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
நீதிமன்றம், நிபந்தனைகள் மீறப்பட்டிருந்தால் கைது செய்யலாம் என உத்தரவிட்ட நிலையில், மார்ச் 25க்கு பிறகு சரணடையாமல் சவுக்கு சங்கர் தலைமறைவாக இருந்து வந்தார்.
இந்நிலையில், அவர் ஆந்திராவின் சித்தூரில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து அங்கு விரைந்த சென்னை தனிப்படை போலீசார், அவரை கைது செய்தனர். அவருடன் இருந்த அவரது தோழி மாலதியும் காவலில் எடுக்கப்பட்டார்.
தற்போது, அவரை சென்னை கொண்டு வந்து மேலான விசாரணை நடத்த போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த சம்பவம் சமூக வலைதளங்களிலும், அரசியல் வட்டாரத்திலும் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
English Summary
YouTuber Savukku Shankar arrested A thriller that surpasses cinema How was YouTuber Savukku Shankar arrested while staying at the lodge