நீங்கள் எதிர்க்க வேண்டியது உங்களையே...! -ஒவ்வொரு குற்றத்தையும் சுட்டிக்காட்டிய தமிழிசை
You have to oppose yourself Tamilisai pointed out every crime
தமிழக பாஜக முன்னாள் தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், இன்று வெளியிட்டுள்ள அறிக்கை அரசியலில் பரபரப்பை கிளப்பியுள்ளது.அதில் அவர் தெரிவித்தருப்பதாவது,"முதலமைச்சர் அவர்களே, மத்திய அரசு ‘இந்தியை ஏற்றுக்கொண்டால்தான் கல்வி நிதி வழங்கப்படும்’ என்று எப்போதும் தெரிவிக்கவில்லை.
புதிய கல்விக் கொள்கை என்பது தாய்மொழியை ஊக்குவிப்பதற்கானது, இந்தியை திணிப்பதற்கானது அல்ல.நீங்கள் இந்திக்கு எதிராக போராடப் போகிறீர்கள் என்றால், தமிழ்நாட்டில் இந்தியை திணித்த காங்கிரஸை தான் எதிர்க்க வேண்டும்.அரசு பள்ளி மாணவர்களுக்கு 2 மொழி, ஆனால் தனியார் பள்ளிகளுக்கு 3 மொழி.

இது தான் உண்மையான பாரபட்சக் கல்விக் கொள்கை. அதை எதிர்த்து போராடுங்கள்" என்றார்.தமிழிசை தொடர்ந்து கடுமையாகச் சாடியுள்ளார்.அதில்,"நீட்டை எதிர்க்க வேண்டுமென்றால், உச்ச நீதிமன்றத்தையே எதிர்க்க வேண்டும். ஆனால், ‘நீட்டை ரத்து செய்கிறேன்’ என்று மக்களை ஏமாற்றியது யார்? மக்களுக்கு நன்றாகத் தெரியும்! உலகம் முழுவதும் வணங்கப்படும் திருவள்ளுவர் காவி உடை அணிந்தவர்; ஆனால் அவர் மீது வெள்ளை உடையை திணித்த பாவம் உங்களதுதான்.
இப்போது உங்களையே எதிர்த்து போராடப் போகிறீர்களா?” என்றார்.அவர் மேலும் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.அதில்"மனிதக் கழிவை மனிதன் அள்ளும் அவலம் முடிவுற்றபோதிலும், உங்கள் சொந்த தொகுதியில் துப்புரவு தொழிலாளர்கள் உயிரிழக்கின்றனர். அதை எதிர்த்து போராடுங்கள்.
வேங்கை வயலில் மக்கள் ‘மலமுடன் கலந்த தண்ணீர்’ குடிக்கிறார்கள்.அதற்கெதிராக போராடுங்கள்.கள்ளச்சாராயம் 67 பேரை பலிகொண்டது; ஆனால் நீங்கள் ஆறுதல் சொல்ல கூடச் செல்லவில்லை. அதை எதிர்த்து போராடுங்கள்.
ஆணவக் கொலைகள், பெண்கள் மீதான வன்முறை, சாதிய வேற்றுமை.
இவை அனைத்தும் உங்கள் ஆட்சியில் தலைவிரித்தாடுகின்றன” என்றார்.இறுதியாக அவர் அதிரடியாகக் குறிப்பிட்டார். அதில்,"ஒரு விமான சாகசத்தில் கூட பாதுகாப்பு வழங்க முடியாத காவல்துறை! ஒரு அரசியல் கூட்டத்தில் 41 உயிர்களை இழந்த பாதுகாப்பு குறைபாடு! இதனை எல்லாம் தட்டிக்கேட்காமல், உங்களையே எதிர்த்து போராடினால் தான் அது உண்மையான போராட்டம் ஆகும்!" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
You have to oppose yourself Tamilisai pointed out every crime