தேர்தல் கருத்து கணிப்புகள் சாதகம்; முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்பு..! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் மொத்தமுள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக கடந்த 23ம் தேதி அமைதியான முறையில் நடந்து முடிந்தது. அதனபடி, வரும் மே 04-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது.

நேற்றைய தினம் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகின. அதன்படி, மீண்டும் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்துள்ளது. இந்நிலையில், திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசி வருகின்றனர்.

அதன்படி, இன்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை, திமுக வேட்பாளர்கள் சந்தித்தனர். அப்போது வெற்றி வாய்ப்புகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்துள்ளார்.

திமுக வேட்பாளர்கள், பொதுச் செயலாளர் துரைமுருகன், எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், எ.வ.வேலு, கே.ஆர். பெரியகருப்பன், சு.முத்துசாமி, சி.வீ. மெய்யநாதன், சி.வி. கணேசன், செந்தில்பாலாஜி, திமுக துணை அமைப்புச் செயலாளர் எஸ். ஆஸ்டின், டி.ஜெ. கோவிந்தராஜன், சபா. இராஜேந்திரன், நாமக்கல் இராணி, காதர்பாட்சா முத்துராமலிங்கம், கே.எஸ். மூர்த்தி, ரெ. மகேஷ், ஆ. தமிழரசி, எஸ்.ஏ. சத்யா, மு.மணிகண்டன், புதுச்சேரி ஆர். சிவா ஆகியோர் நேரில் சந்தித்துள்ளனர்.

இந்த சந்திப்பின் போது திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், தலைமை நிலையச் செயலாளர் பூச்சிமுருகன் ஆகியோர் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

With election opinion polls indicating favorable results DMK candidates meet with Chief Minister MK Stalin


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->