மாநில கட்சி அங்கீகாரத்தை இழக்கும் நாம் தமிழர் கட்சி..? - Seithipunal
Seithipunal


கடந்த ஏப்ரல் மாதம் 23-ஆம் தேதி 234 தொகுதிகளை கொண்ட தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறத்து. அதன்படி கடந்த மே 04 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டது. அதில் பெரும்வாரியான தேர்தல் கருத்து கணிப்புகளையும் தகர்த்தெறிந்து விஜய் தலைமையிலான தவெக  108 தொகுதிகளில் வெற்றிப்பெற்றுள்ளது.

இந்த தேர்தலில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நாம் தமிழர் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றிபெற முடியாமல் டெபாசிட் இழந்தது.  அக்கட்சியின் வாக்கு சதவீதமும் 04 சதவீதமாக குறைந்துள்ளது.

முன்னதாக கடந்த 2016-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் இருந்து நாம் தமிழர் கட்சி தேர்தல் அரசியலில் களம்கண்டு வரும் நிலையில், அப்போதில் இருந்து தனித்தே போட்டியிட்டு வருகிறது. 2016-ல் 1.1 சதவீத வாக்குகளை பெற்ற அக்கட்சி, 2017-இல் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 2.15 சதவீதம் வாக்குகளை பெற்றது.

தொடர்ந்து 2019 நாடாளுமன்ற தேர்தலில் 3.9 சதவீத வாக்குகளும், 2021 சட்டமன்ற தேர்தலில் 6.6 சதவீத வாக்குகளையும் பெற்றது. அதனையடுத்து 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 8.2 சதவீதம் வாக்குகளை பெற்றது. அதன் மூலம் நாம் தமிழர் கட்சி, மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்றது.

இந்தியாவில் ஒரு கட்சி மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெற, சட்டசபை அல்லது மக்களவைத் தேர்தலில் ஒரு மாநிலத்தில் குறைந்தபட்சம் 06 சதவீத வாக்குகள் மற்றும் 02 இடங்களை வெல்ல வேண்டும். அல்லது சட்டப்பேரவை அல்லது மக்களவை தேர்தலில் அந்த மாநிலத்தில் 08 சதவீத வாக்குகளை பெற்றிருக்க வேண்டும்.

ஆனால், இந்த சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி 04 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றுள்ள நிலையில், அக்கட்சியின் மாநில கட்சி அங்கீகாரத்துக்கு பெரும் சிக்கல் எழுந்துள்ளது. இந்த சட்டமன்றத் தேர்தலில் 08 சதவீத வாக்குகளை நாம் தமிழர் கட்சி பெறத் தவறினாலும், ஒரு கட்சி தனது அங்கீகாரத்த நிரூபிக்க தேர்தல் ஆணையம் மற்றொரு வாய்ப்பையும் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் வரை நாம் தமிழர் கட்சியின் மாநில அங்கீகாரத்துக்கு எந்த சிக்கலும் ஏற்படாது. ஆனால், அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி 08 சதவீத வாக்குகளையோ அல்லது 6% வாக்குகளுடன், 01 மக்களவை இடத்தை கைப்பற்ற தவறினால் நாம் தமிழர் கட்சியின் மாநில கட்சி அங்கீகாரம் ரத்து செய்யப்படும் நிலைக்கு தள்ளப்படும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Will the Naam Tamilar Katchi lose its status as a recognized state party


கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..


செய்திகள்



Seithipunal
--> -->