வாய திறந்தாலே ஆபாசமாக பேசும் பொன்முடி; கருணாநிதி, ஜெயலலிதா போன்று தயவு தாட்சணியமின்றி ஸ்டாலின் நடந்துகொள்வாரா..?
Will Stalin behave as mercilessly as Karunanidhi and Jayalalithaa in the Ponmudi issue
சைவம் மற்றும் வைணவம் குறித்தும், பெண்கள் பற்றி ஆபாசமாக பேசி சர்ச்சையில் சிக்கியுள்ள அமைச்சர் பொன்முடியை, அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என, பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
முன்னதாக கருணாநிதி மற்றும்ஜெயலலிதா ஆகியோர் முதல்வராக இருந்தபோது, இது போன்று அருவெறுக்கத்தக்க முறையில் ஆபாசமாக பேசுவோரை, தயவு தாட்சணியம் பார்க்காமல் உடனடியாக அமைச்சர் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கியுள்ளனர்.

ஆனால், தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்துடைப்புக்காக கட்சிப் பதவியில் இருந்து மட்டும் தூக்கியுள்ளார் என்றும், அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவது அவசியம் என்றும், பல்வேறு தரப்பினரும்வலியுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முகாம் அலுவலகத்தில், முதல்வர் மு.க. ஸ்டாலினை, அமைச்சர் பொன்முடி சந்தித்து பேசினார். ஆனால், இச்சந்திப்பு பேச்சு குறித்த விபரம் வெளியிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
English Summary
Will Stalin behave as mercilessly as Karunanidhi and Jayalalithaa in the Ponmudi issue