ராகுல் காந்தி கேள்விகளுக்கு தேர்தல் ஆணையம் ஏன் பதிலளிக்க மறுத்தது? - முன்னாள் காங்கிரஸ் எம்.பி ரம்யா கேள்வி
Why Election Commission refuse answer Rahul Gandhis questions Former Congress MP Ramya questions
தமிழ் திரைப்படங்களான குத்து, பொல்லாதவன், வாரணம் ஆயிரம் உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களை பெருமளவில் ஈர்த்தவர் நடிகை ரம்யா. இவர் கர்நாடகாவில் முன்னாள் காங்கிரஸ் எம்.பியாக இருந்தவர்.

இதனிடையே,தேர்தல் ஆணையம் குறித்து ராகுல் காந்தி தெரிவித்த குற்றச்சாட்டுகள் குறித்து பத்திரிகையாளர்களை சந்தித்தபொது ரம்யா தெரிவித்ததாவது, "ராகுல் காந்தி தெரிவித்த அனைத்தும் சரியானது.
தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பு ஒரு கேலிக்கூத்தாக இருந்தது. அவர்கள் உண்மையான பிரச்சினையைப் பற்றி கூட பேசவில்லை.
வாக்காளர் பட்டியலில் ஏன் போலி வாக்காளர்கள் உள்ளனர், அவர்களை நீக்க அவர்கள் என்ன செய்வார்கள் என்பதற்கு அவர்கள் உறுதிப்பட தெரிவிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
இதற்கு முன்பு, வாக்கு திருட்டு குற்றச்சாட்டுகள் மற்றும் பீகார் SIR சர்ச்சை தொடர்பாக ராகுல் காந்தி தேர்தல் ஆணையத்தை கடுமையாக கண்டித்தார். இந்த குற்றச்சாட்டுகளுக்கு நிருபர்கள் சந்திப்பில் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது.
English Summary
Why Election Commission refuse answer Rahul Gandhis questions Former Congress MP Ramya questions