திருவாரூர் பின்தங்கியது ஏன்...? அடுக்கடுக்கான கேள்விகளுடன் அண்ணாமலை ஆவேசம்...! - தேர்தல் களத்தில் பரபரப்பு - Seithipunal
Seithipunal


தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்ததாவது,"அருள்மிகு தியாகராஜ சுவாமி எழுந்தருளும் ஆழித் தேரையும், வளம் மிக்க விவசாயப் பாரம்பரியத்தையும் கொண்ட திருவாரூர் சட்டமன்றத் தொகுதியில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் கோவி சந்துரு அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டேன் என தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் பொருளாதார வளர்ச்சி மற்றும் உற்பத்தி அளவுகளில் கடைசி நிலைகளிலும், மனித வளர்ச்சி குறியீட்டில் கீழ்நிலைப் பகுதிகளிலும் இருப்பது கவலைக்குரிய நிலை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த மூன்று தசாப்தங்களாக ஒரே கட்சியின் பிரதிநிதித்துவம் இருந்தபோதும், அடிப்படை வளர்ச்சி கூட முழுமையாக ஏற்படவில்லை என விமர்சித்துள்ளார்.

இந்த நிலை மாற வேண்டுமெனில் திருவாரூரில் அரசியல் மாற்றம் அவசியம் என்றும், திமுக ஆட்சியை மக்கள் மாற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், தொகுதியில் நிலவும் முக்கிய பிரச்சனைகளுக்கு காரணமாக தற்போதைய திமுக வேட்பாளர் இருப்பதாகவும், குற்றச்சாட்டுகள் மற்றும் சர்ச்சைகள் நிலவுகின்ற நிலையில் அவரை வேட்பாளராக அறிவித்தது வெட்கக்கேடானது எனவும் அவர் கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது

.நெல் கொள்முதல், சேமிப்பு கிடங்குகள் உள்ளிட்ட விவசாய அடிப்படை வசதிகளில் கூட போதிய முன்னேற்றம் இல்லாமல், விவசாயிகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

திருவாரூர் பெருமையை மீட்டெடுத்து, விவசாயிகளின் நலனை பாதுகாக்க தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் கோவி சந்துரு அவர்களை பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனவும், இதன் மூலம் தொகுதி புதிய மாற்றத்தை காணும் எனவும் அவர் தெரிவித்ததாக குறிப்பிடப்படுகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Why did Tiruvarur lag behind Annamalai obsession series questions Excitement election field


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




சினிமா

Seithipunal
--> -->