விசில்–ரோலர் சின்ன குழப்பம்: விஜய்க்கு புதிய தலைவலி? ரோலரால் காத்திருக்கும் பஞ்சாயத்து! 2026 அவ்வளவு தானா? உண்மை இது தான்!
Whistle roller confusion Vijay has a new headache Panchayat waiting for the roller Is 2026 enough This is the truth
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்திற்கு (தவெக) இந்தியத் தேர்தல் ஆணையம் ‘விசில்’ சின்னத்தை ஒதுக்கியுள்ளது. இந்த அறிவிப்பு தவெக ஆதரவாளர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், சமூக வலைதளங்களில் ஒரு புதிய குழப்பம் உருவாக்கப்பட்டுள்ளது. ‘ரோலர்’ சின்னம், ‘விசில்’ சின்னத்தைப் போலவே இருப்பதாகவும், 2026 சட்டமன்றத் தேர்தலில் சுயேச்சை வேட்பாளர்களுக்கு ரோலர் சின்னம் ஒதுக்கப்பட்டால் வாக்காளர்களிடையே குழப்பம் ஏற்படும் எனவும் கூறி, ஒரே மாதிரியான புகைப்படங்களுடன் பதிவுகள் பரப்பப்பட்டு வருகின்றன.
தமிழக அரசியல் களம் சூடுபிடித்து வரும் இந்த சூழலில், தவெக-வின் தேர்தல் சின்னம் குறித்து எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. கடந்த ஆண்டு நவம்பர் மாதமே கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் மற்றும் தேர்தல் வியூகப் பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் டெல்லியில் முகாமிட்டு, இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் விருப்பமான சின்னங்களின் பட்டியலை சமர்ப்பித்திருந்தனர். நீண்ட ஆலோசனைகளுக்குப் பிறகு, தவெக-வுக்கு ‘விசில்’ சின்னம் பொதுச் சின்னமாக ஒதுக்கப்பட்டது. அங்கீகரிக்கப்படாத புதிய அரசியல் கட்சிகளுக்கு பொதுவாக ஒரே சின்னம் வழங்கப்படாத நிலையில், அனைத்து விதிமுறைகளையும் பூர்த்தி செய்ததன் காரணமாக, தமிழகத்தின் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் விசில் சின்னத்தில் போட்டியிட தவெக-வுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் தவெக தொண்டர்கள் விசில் சின்னத்தை பரவலாக புரோமோட் செய்து வருகின்றனர். ‘கோட்’ படத்தில் இடம்பெற்ற “சத்தம் பத்தாது… விசில் போடு” என்ற பாடல் வரிகள் முதல், ரஜினி, கமல், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் விசில் அடிக்கும் பழைய திரைப்படக் காட்சிகள் வரை பகிரப்பட்டு வருகின்றன. இதற்கிடையே, திட்டமிட்டு ஒரே புகைப்படம், ஒரே வரிகளுடன் ‘ரோலர்’ சின்னம் விசில் போல இருப்பதாக கூறும் பதிவுகள் பரவத் தொடங்கின.
இதற்கு விளக்கம் அளித்துள்ள தமிழக வெற்றி கழகத்தினர், சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தகவல் முற்றிலும் போலியானது எனத் தெளிவுபடுத்தியுள்ளனர். தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ள ரோலர் சின்னம் என்பது பெரிய ரோடு ரோலர் அல்லது சிறிய கை உருளை (ஹேண்ட் ரோலர்) போன்ற வடிவங்களைக் கொண்டது என்றும், அது விசில் சின்னத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, வாக்குப்பதிவின்போது எந்தவிதமான குழப்பமும் ஏற்படாது என்றும், தவெக-வின் விசில் சின்னத்துடன் ரோலர் சின்னத்திற்கு சம்பந்தமே இல்லை என்றும் கட்சி நிர்வாகிகள் கூறியுள்ளனர்.
சமூக வலைதளங்களில் பரவும் இந்த வகை பதிவுகள் திட்டமிட்டு சிலரால் பரப்பப்படுவதாகவும், அதற்கு பொதுமக்கள் இடம் கொடுக்க வேண்டாம் என்றும் தவெக தரப்பில் இருந்து வலியுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், விசில் சின்னம் தொடர்பான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
English Summary
Whistle roller confusion Vijay has a new headache Panchayat waiting for the roller Is 2026 enough This is the truth