விஜய் போட்டியிடும் தொகுதி எது? பெரம்பூர் தொகுதியா?விஜய்க்கு எதிராக சேகர்பாபுவை களமிறக்க திமுக திட்டம்? ஆலோசனையில் அறிவாலயம்!
Which constituency will Vijay contest Is it Perambur constituency DMK plans to field Shekarbabu against Vijay Arivalayam in consultation
தமிழக சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளார். கட்சி வேட்பாளர்களுக்கான நேர்காணலை அவர் நேரடியாக நடத்தி வருகிறார். மேலும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலும் தயாராகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தகவலின்படி,
-
செங்கோட்டையன் – கோபிசெட்டிப்பாளையம்,
-
ஆதவ் அர்ஜுனா – வில்லிவாக்கம்,
-
சிடிஆர் நிர்மல் குமார் – உசிலம்பட்டி,
-
அருண்ராஜ் – திருச்செங்கோடு,
-
மரியா வில்சன் – ஆர்.கே.நகர்
தொகுதிகளில் போட்டியிட தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
ஆனால் தவெக தலைவர் விஜய் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்பதே தற்போது அரசியல் வட்டாரங்களில் பெரிய கேள்வியாக உள்ளது. இதற்காக இரண்டு தொகுதிகள் முக்கியமாக பேசப்படுகின்றன. அவை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு.
ஏற்கனவே பெரம்பூர் தொகுதியில் விஜய் போட்டியிட வேண்டும் என்று ஆதவ் அர்ஜுனா தலைமையில் கட்சி நிர்வாகிகள் தீர்மானம் நிறைவேற்றியதாக கூறப்படுகிறது. மேலும் வேட்பாளர் நேர்காணலில் கலந்து கொண்ட சிலரிடம், “பெரம்பூர் தொகுதிக்கு அடிக்கடி வருவேன்” என்று விஜய் குறிப்பிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதே நேரத்தில் திருச்சி கிழக்கு தொகுதியும் விஜய்க்கு ஒரு விருப்பத் தேர்வாக இருக்கலாம் என்று சிலர் கூறுகின்றனர். இந்த இரண்டு தொகுதிகளிலும் சுமார் 30 சதவீதம் சிறுபான்மை சமூக வாக்குகள் இருப்பதும் அரசியல் கணக்கில் முக்கியமாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் விஜய் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும், அந்த தொகுதியில் திமுக வலுவான வேட்பாளரை நிறுத்தும் திட்டத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் விஜய்யை அந்த தொகுதியில் அதிகமாக கவனம் செலுத்தச் செய்து, மற்ற பகுதிகளில் பிரச்சாரம் செய்ய விடாமல் தடுப்பதே திமுகவின் நோக்கமாக கூறப்படுகிறது.
விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்டால், அங்கு அமைச்சர் சேகர்பாபுவை களமிறக்க திமுக தலைமை ஆலோசித்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது. தற்போது துறைமுகம் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் சேகர்பாபு, வில்லிவாக்கம் அல்லது பெரம்பூர் பகுதிக்கு மாறலாம் என்ற பேச்சும் உள்ளது.
மறுபுறம் விஜய் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்டால், அங்கு தற்போதைய எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் மீண்டும் களமிறக்கப்படலாம் என கூறப்படுகிறது. இருப்பினும் அவருக்கும் அமைச்சர் கே.என். நேருவுக்கும் இடையே சில கருத்து வேறுபாடுகள் இருப்பதாகவும், அதனால் வேறு பெயர்களும் பரிசீலனையில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மொத்தத்தில், விஜய் எந்த தொகுதியில் போட்டியிடுகிறார் என்பதைக் கவனித்து திமுக தனது தேர்தல் திட்டத்தை அமைத்துக் கொண்டிருக்கிறது என்பதே தற்போதைய அரசியல் நிலவரமாக பார்க்கப்படுகிறது.
English Summary
Which constituency will Vijay contest Is it Perambur constituency DMK plans to field Shekarbabu against Vijay Arivalayam in consultation