திமுக - அதிமுக கூட்டணி உறுதியா..? டிகேஎஸ் இளங்கோவன் கூறியது என்ன? - Seithipunal
Seithipunal


சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 04 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அத்துடன், நிலையான ஆட்சியமைய அவசர முடிவெடுக்க ஸ்டாலினுக்கு அதிகாரம் வழங்கி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இந்த கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டி.கே.எஸ்.இளங்கோவன், ''திமுக - அதிமுக கூட்டணி இல்லை என ஸ்டாலின் கூறியுள்ளார். ஒருவேளை கட்சித் தலைவர் ஸ்டாலின் இது முடிவெடுத்தால் கூட்டணியை ஏற்போம்'' என்று தெரிவித்துள்ளார்.

தவெக ஆட்சியமைவதை நாங்கள் தடுக்கவில்லை, நாங்கள் ஆளுநரிடம் அனுமதிக்காதீர்கள் என்றா சொன்னோம்? ஆளுநர் தவெகவிடம் பெரும்பான்மை எண்ணிக்கையை கேட்கிறார், அதனை கொடுத்துவிட்டு ஆட்சியமைக்க வேண்டியது தானே. ஆட்சியமைப்பதற்கு முன்பாக பெரும்பான்மைக்கான ஆதரவு குறித்த பட்டியலை ஆளுநரிடம் வழங்குவது வழக்கமானதுதான் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

தவெகவிற்கு அறுதிப் பெரும்பான்மை இல்லாத நிலையில், பதவிப் பிரமாணம் செய்துவைத்து முதல் கூட்டத் தொடரிலேயே ஆட்சிக் கலைந்தால் ஆளுநர் தானே பொறுப்பு என்றும், எனவே அவரின் முடிவை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். இண்டியா கூட்டணியை காங்கிரஸ் சிதைத்து வருகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இந்து நடந்த கூட்டத்தில் திமுக சட்டமன்றக் குழு தலைவர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பது குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கவில்லை. அரசியல் ரீதியாக பாஜகவை எதிர்க்கும் கட்சிகளை எங்கள் கூட்டணியில் வைத்துள்ளோம் என கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

What did TKS Elangovan say regarding a DMK and AIADMK alliance


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->