மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி! - Seithipunal
Seithipunal


கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

மேற்கு வங்க மாநிலத்தில் வரும் ஜூலை 8ம் தேதி பஞ்சாயத்து தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து அந்த மாநிலத்தின் முதலமைச்சர் மம்தா பானர்ஜி, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அந்த வகையில் கடந்த வாரம் வடக்கு வங்காளத்தில் 2 நாள் சுற்றுப்பயணம் முடித்து விட்டு, கொல்கத்தா நகருக்கு திரும்பிக்கொண்டிருந்தார்.

அப்போது வந்துகொண்டிருந்த ஹெலிகாப்டர் தெளிவற்ற வானிலை காரணமாக சிலிகிரி அருகே உள்ள செவோக் விமான படை தளத்தில் அவசரமாக தரையிறக்கம் செய்யப்பட்டது. இந்த அவசர தரையிறக்கத்தின் போது ஏற்பட்ட அதிர்ச்சியின் காரணமாக மம்தா பானர்ஜிக்கு முதுகுப்பகுதியில் வலி ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு முதுகு மற்றும் மூட்டு பகுதியில் காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக கொல்கத்தாவில் உள்ள எஸ்.எஸ்.கே.எம். மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மம்தா பானர்ஜி, இன்று சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

West Bengal Chief Minister Mamata Banerjee returned home from the hospital


கருத்துக் கணிப்பு

5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள், "2024 மக்களவை" தேர்தலில் எதிரொலிக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள், "2024 மக்களவை" தேர்தலில் எதிரொலிக்குமா?




Seithipunal
-->