விக்கிரவாண்டி இடைத்தேர்தல் : நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி!!
Vikravandi by election Naam Tamilar Party alone contest
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் : மக்களவை தேர்தலை தொடர்ந்து நடைபெறவுள்ள விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விக்கிரவாண்டி திமுக சட்டமன்ற தொகுதி உறுப்பினர் புகழேந்தி திடீரென காலமானார். விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. மக்களவைத் தேர்தலுடன் விக்கிரவாண்டி இடைத்தேர்தலும் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் மக்களவைத் தேர்தலுடன் நடைபெறாது என்று தேர்தல் ஆணையம் கூறியது.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களை கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்தது. இந்தியாவின் பிரதமராக 3வது முறையாக நரேந்திர மோடி கடந்த ஜூன் 9ஆம் தேதி பதவி ஏற்றுக்கொண்டார்.

இந்த நிலையில், நேற்று விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வரும் ஜூலை 10ஆம் தேதி நடைபெறும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார். விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு ஜூன் 14ஆம் தேதி தொடங்கி 21ஆம் தேதி வரை வேட்புமனு செய்யலாம் என்று கூறினார்.
விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தல் ஜூலை 10ஆம் தேதி நடைபெற்று ஜூலை 14ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த நிலையில் விக்கிரவாண்டி இடை தேர்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நடந்து முடிந்த நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி தனித்துப்போட்டியிட்டு 8.19 சதவீத வாக்குகளை பெற்று மாநில கட்சி அந்தஸ்தை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Vikravandi by election Naam Tamilar Party alone contest