அரியலூரில் அதிரடி காட்டிய விஜய்: 'பாஜக செய்வது துரோகம் என்றால் திமுக செய்வது நம்பிக்கை மோசடி' என பேச்சு..! - Seithipunal
Seithipunal


தவெக தலைவர் விஜய், திருச்சி பரப்புரையை நிறைவு செய்த பின்னர்  அரியலூர் சென்றடைந்தார். கட்டுக்கடங்காத கூட்டத்திற்கு மத்தியில், அரியலூரில் அண்ணா சிலை முன் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அங்கு அவரின் தேர்தல் பரப்புரையில் மக்கள் முன் பேசியதாவது,

தேர்தலில் அளித்த வாக்குறுதிகளில் முக்கால்வாசி வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை என்றும்,மத்தியில் ஆளும் பாஜக  ஜனநாயக படுகொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன், திருச்சியில் மைக் பிரச்சினை இருந்ததால் அங்கு பேசிய ஒருசில விஷயத்தை மீண்டும் சொல்ல நினைக்கிறேன் என்று அந்த விஷயங்களையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதாவது, அந்த காலத்தில் போருக்கு முன் குலதெய்வ கோவிலுக்கு செல்வது வழக்கம். அப்படி அடுத்த ஆண்டு நடைபெறும் ஜனநாயக போருக்கு முன் மக்களாகிய உங்களை பார்த்து செல்ல வந்துள்ளேன். உங்களுடைய இந்த அன்புக்காக, எவ்வளவு பெயர் உயரத்தையும், வசதியையும், வருமானத்தையும் தூக்கி எரிந்து வரலாம் என்று தெரிவித்துள்ளார். அத்துடன், உங்கள் அன்பு, பாசத்தை விட உலகில் எனக்கு எதுவுமே பெரிதல்ல. உங்கள் வீட்டில் ஒருவனாக உறவினனாக என்னை ஆக்கியுள்ளனர் அதற்காகவே எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு வரலாம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், என்னங்க பெரிய பணம்? போதும் என்ற அளவிற்கு பார்த்தாச்சு... அரசியலுக்கு வந்துதான் நான் பணம் சம்பாதிக்க வேண்டுமா என்ன? என கூறியதோடு, அந்த கொஞ்சம் கூட அவசியமில்லை. எனக்கு எல்லாவற்றையும் கொடுத்த உங்களுக்காக உழைப்பதைவிட வேறு எந்த எண்ணமும் வேலையும் எனக்கு இல்லை என்று மக்களிடம் உறுதியளித்துள்ளார்.

என்னடா இந்த விஜி தனி ஆளாக இருப்பான் என்று பார்த்தால் எப்போதும் மக்கள் கடலோடு இருக்கிறானே என்றும் நம் எதிரிகளுக்கு தெரிந்துவிட்டதால் தன்னை பற்றி கண்ணாபின்னா என பேசுகிறார்கள். நான் மரியாதையாக பேசினால்கூட தவறாக எடுத்துக்கொள்கிறார்கள் என்று கூறியுள்ளார். யார் என்ன சொன்னாலும் அறிஞர் அண்ணா சொன்னது போல வாழ்க வசவாளர்கள் என சொல்லி சென்றுவிட வேண்டியதுதான் என்று பேசியுள்ளார்.

மேலும், பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலிலேயே இல்லை என்றும், அங்கு வாக்கு திருட்டு நடந்துள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ளார். ஒரே நாடு ஒரே தேர்தல் வைத்து ஒரே நேரத்தில் தில்லுமுல்லு செய்ய பாஜக நினைக்கின்றது என்று குறிப்பிட்டுள்ளார். இது ஜனநாயக படுகொலை என்றும், தொகுதி மறுசீராய்வு என்ற பெயரில் வட இந்தியாவுக்கு மட்டும் அதிக தொகுதிகள் கிடைக்கும்படி மோசடி செய்கிறார்கள் என்று அறிவித்துள்ளார்.

இது தென் இந்தியாவின் சக்தியை குறைக்க செய்யபடும் மோசடி வேலை இது என்று தெரிவித்துள்ளார். ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் பாஜக அரசு செய்யும் துரோகம் இது. தவெக இது எல்லாவற்றையும் ஆரம்பத்தில் இருந்தே எதிர்க்கிறது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், நான், நீங்கள் என அனைவரும் தான் திமுகவை தேர்ந்தெடுத்தோம என்றும், நல்லது செய்வார்கள் என நினைத்தே திமுகவுக்கு வாக்களித்தோம். அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றியதாக திமுக மக்களை ஏமாற்றுகிறது என்றும் தெரிவித்துள்ளார். அத்துடன் திமுகவில் ஆட்சியால் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளில் நிறைவேற்றப்படாத வாக்குரித்தாக்களை பட்டியலிட்டுள்ளார்.

மேலும், என்ன கேள்வி கேட்டாலும் திமுக அரசிடம் இருந்து பதில் வரப்போவதில்லை என்றும், பாஜக செய்வது துரோகம் என்றால் திமுக செய்வது நம்பிக்கை மோசடி. மக்களை ஏமாற்றுவதில் ஏமாற்றுவதில் திமுகவும், பாஜகவும் ஒரே வகையறா என்று பரப்புரையில் பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vijays speech in Ariyalur said that what the BJP is doing is betrayal while what the DMK is doing is a breach of trust


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->