உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மாணவர்களுக்கு, இந்தியாவில் மாணவர் சேர்க்கை.. விஜயகாந்த் வலியுறுத்தல்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் செயல்படும் அரசு, தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை உறுதி செய்து,  அந்த இடங்களில் உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவ, மாணவியர்களை சேர்க்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனில் இருந்து சுமார் 20,000 இந்திய மாணவர்கள் நாடு திரும்பியுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் மருத்துவ மாணவர்கள். உக்ரைனில் தொடர்ந்து போர் நடைபெற்று வருவதால், இந்திய மாணவர்கள் திரும்பி செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இந்திய மாணவர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகி உள்ளது.

உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது.  மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு  இந்தியாவிலேயே அவர்கள் கல்வியை நிறைவு செய்ய மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த விவகாரத்தில் காலம் தாழ்த்தாமல் நடப்பு கல்வி ஆண்டிலேயே  மாணவர்கள் கல்வி தொடர மத்திய மாநில அரசுகள் உதவ வேண்டும். இந்தியாவில் செயல்படும் அரசு, தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை உறுதி செய்து,  அந்த இடங்களில் உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவ, மாணவியர்களை சேர்க்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vijayakanth says about ukraine indian students


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->