தமிழக தலைமைச்செயலாளர் பிறப்பித்த உத்தரவு.. பாராட்டு தெரிவித்த விஜயகாந்த்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ஆக்கிரமிப்புக்கு உள்ளான கோவில் நிலங்கள் மீட்பு உள்ளிட்ட பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதனிடையே தமிழக தலைமை செயலாளர் இறையன்பு சில நாட்களுக்கு முன்பு பணியில் உள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தங்களது சொத்து விவரங்களையும், தங்கள் குடும்ப உறுப்பினர்களின் சொத்து விவரங்களையும் வருகின்ற 2022 ஜனவரி 31-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவிற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த், தலைமைச் செயலாளர் இறையன்பு-விற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் பணியில் உள்ள அனைத்து ஐஏஎஸ் அதிகாரிகள், தாங்கள் வாங்கிய அசையா சொத்துகள் மற்றும் அவர்களது உறவினர் பெயர்களில் வாங்கிய சொத்துகள் விவரங்களை வருகிற ஜனவரி 31 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்  என தலைமைச் செயலாளர் திரு.இறையன்பு IAS  அறிவுறுத்தியுள்ளது வரவேற்கதக்கது.

இதுபோன்ற செயல் வெளிப்படை தன்மையையும், ஊழல் இல்லாத நிர்வாகத்தையும், கொண்டு செல்ல வழிவகுக்கும். ஐஏஎஸ் அதிகாரிகள் என்பவர்கள் நாட்டை வழிநடத்தும் உயர்ந்த பதவிகளில் பணியாற்றுகிறார்கள், அவர்களே வெளிப்படை தன்மையோடு தங்களை அடையாளபடுத்திக் கொண்டால், அவர்களுக்கு கீழ் செயல்படும் மற்ற அதிகாரிகளுக்கு ஓர் எடுத்துக்காட்டாக அமையும்.

இந்த நடைமுறையை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில், அனைத்து அரசு உயரதிகாரிகளும், தங்களது சொத்து விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட வேண்டும். இதுபோன்ற ஓர் அறிவிப்பை வெளியிட்ட தலைமை செயலாளர் திரு. இறையன்புவிற்கு தேமுதிக சார்பில் நன்றி. இந்த நடைமுறை பெயரளவிற்கு இல்லாமல் இதில் விடா முயற்சியுடன், கண்டிப்புடன் செயல்பட்டால் வெளிப்படையான, ஊழலற்ற நிர்வாகம் அமைவதில் ஐயம் இல்லை என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vijayakanth praised the chief secretary


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->