விஜயகாந்திற்கு காலில் 3 விரல்கள் அகற்றம்.. அதிர்ச்சியில் தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள்.!! - Seithipunal
Seithipunal


தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால், கடந்த சில ஆண்டுகளாக பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்து வருகிறார். தனது குடும்பத்தினருடன் விஜயகாந்த் இருக்கும் புகைப்படங்கள் மட்டுமே அவ்வப்போது சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருக்கிறேன். 

மேலும், கட்சி தொடர்பான பணிகளிலும் ஈடுபடுவதில்லை. ஜூன் 14ஆம் தேதி விஜயகாந்த் வழக்கமாக மருத்துவ பரிசோதனைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். சிகிச்சை முடிந்து ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என தேமுதிக சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், விஜயகாந்திற்கு ரத்த ஓட்டம் சீராக இல்லாத காரணத்தினால் அறுவை சிகிச்சை மூலம் காலில் உள்ள மூன்று விரல்கள் அகற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் சிகிச்சைக்கு பின் நலமுடன் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. 

தற்போது விஜயகாந்த் சென்னை நந்தனம் மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைவில் குணமடைய வேண்டும் என ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் பிரார்த்தனை செய்துவருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

vijayakanth health update fans and party members shock


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->