பள்ளி மாணவன் உயிரிழப்பு., வேதனையில் விஜயகாந்த்.! - Seithipunal
Seithipunal


சென்னை தனியார் பள்ளி மாணவன் உயிர் இழப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், "சென்னை வளசரவாக்கத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் பயின்ற இரண்டாம் வகுப்பு மாணவன் திக் ஷிக், பள்ளி வேன் மோதி உயிரிழந்த சம்பவம் அறிந்து அதிர்ச்சியும், மன வேதனையும் அடைந்தேன். 

கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆன்லைனில் வகுப்புகள் நடைபெற்று வந்த நிலையில் கொரோனா கட்டுப்பாடுகள் விலக்கி கொள்ளப்பட்டதையடுத்து தற்போது பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. 

இதுபோன்ற சூழலில் மாணவன் திக் ஷிக் உயிரிழந்திருப்பது மாணவர்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளது. 

படுகாயமடைந்த மாணவனை பள்ளி நிர்வாகம் முதலுதவி சிகிச்சை அளித்து மருத்துவமனையில் அனுமதித்திருந்தால், மாணவனை காப்பாற்றி இருக்கலாம். மாணவனின் உயிரிழப்புக்கு பள்ளி நிர்வாகத்தினர் அஜாக்கிரதையே காரணம். 

பள்ளிக் குழந்தைகளின் நலனை பாதுகாக்க இனியாவது தனியார் பள்ளிகள் விழிப்புடன் செயல்பட வேண்டும். மேலும் உயிரிழந்த மாணவரின் குடும்பத்தாருக்கு பள்ளி நிர்வாகம் உரிய இழப்பீடு வழங்க வேண்டும். 

தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்த பள்ளிக்கல்வித்துறை உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 

மாணவன் உயிரிழப்பிற்கு காரணமானவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, இனி வரும் காலங்களில் இதுபோன்ற அஜாக்கிரதை சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க முடியும்" என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vijayakant mourning to valasaravakkam school student thekashth


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->