எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் விஜயதாரணி.!! - Seithipunal
Seithipunal


விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி நேற்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். 

அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறிய இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்த விஜயதாரணி காங்கிரஸ் கட்சியில் பல ஆண்டுகளாக இருந்தும் உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை என தெரிவித்திருந்தார்.

விஜயதாரணியம் இந்த முடிவை காங்கிரஸ் தலைவர்கள் பலர் கடும் விமர்சனம் செய்த நிலையில் அவரை தகுதி இழக்க செய்ய சபாநாயகருக்கு பரிந்துரைக்கப்படும் என செல்வப்பெருந்தகை தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தனது விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக விஜயதாரணி அறிவித்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவுக்கு விஜயதாரணி எழுதியுள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vijayadharani resigned mla seat


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->