த.வெ.க -தே.மு.தி.க கூட்டணி குறித்து பேசிய விஜய பிரபாகரன்....! என்ன சொன்னார் தெரியுமா? - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டையில் தே.மு.தி.க. இளைஞரணி செயலாளர் ''விஜய பிரபாகரன்'' செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது,"தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் தொடங்கியுள்ளது. 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் விரைவில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.

ஒவ்வொரு ஊருக்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளோம்.அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் கடலூரில் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளோம். தே.மு.தி.க.வை கட்சி ரீதியாக வலுப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கூட்டணி குறித்த அறிவிப்பு தேர்தல் நெருங்கும் நேரத்தில் வெளியாகும்.

கேப்டன் விஜயகாந்த் இப்போது நம்மிடையே இல்லை என்ற வருத்தம் எங்களுக்குள் எப்போதும் இருக்கும். ஆனால், அவருடைய ஆசைகளையும், கொள்கைகளையும் நாங்கள் நிச்சயம் வென்றெடுப்போம்.2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று அதனை அவருடைய நினைவிடத்தில் சமர்ப்பிப்போம் " எனத் தெரிவித்தார்.

மேலும், த.வெ.கவுடன் கூட்டணி அமைப்பது பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.அதற்கு பதிலளித்த விஜய பிரபாகரன், ''கூட்டணி குறித்து உரிய நேரத்தில் அறிவிப்போம். விஜய் ஒன்றும் எங்களுக்கு எதிரி இல்லை. அவர் அண்ணன் தானே.விஜயகாந்த் குருபூஜை சமயத்திலும், 'கோட்' திரைப்படத்தின்போதும் அவரைச் சந்தித்திருக்கிறேன்.

அப்போது கூட்டணி விஷயங்கள் குறித்து நாங்கள் பேசவில்லை. என்னையும் அவரையும் ஒப்பிட வேண்டாம். எனக்கு இப்போது 33 வயதுதான் ஆகிறது. ஆனால் அண்ணனுக்கு 50 வயது.அவர் என்னை விட மிகவும் சீனியர். அவருக்கு நிறைய அனுபவம் இருக்கிறது. விஜய் கட்சி ஆரம்பித்தவுடன் பல லட்சம் இளைஞர்கள் அவருக்கு பின்னால் இருப்பது அவரது பலமாக நான் பார்க்கிறேன்'' என பதிலளித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vijaya Prabhakaran spoke about the TRP DMK alliance


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->