பெண் வாக்குகளை குறிவைக்கும் விஜய்! வாக்கு அறுவடைக்கு தயாராகும் 'பெண்கள் படை'! விஜய் செய்யப்போகும் மாயாஜாலம்.!
Vijay targets women votes Women Army prepares to harvest votes Vijay magic trick
தமிழக சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய் புதிய அரசியல் வியூகத்துடன் களமிறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, மாநிலம் முழுவதும் பெண் வாக்காளர்களை ஈர்க்கும் வகையில் 234 தொகுதிகளிலும் பெண்கள் படையை உருவாக்கும் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த திட்டத்தின் படி, ஒவ்வொரு தொகுதியிலும் 1,000 பெண்கள் என மொத்தம் 2.34 லட்சம் பெண்கள் கொண்ட ஒரு பெரிய அமைப்பை உருவாக்க தவெக செயல்பட்டு வருவதாக தகவல். இந்த பெண்கள் அணிகள் வீடு தோறும் சென்று கட்சியின் கொள்கைகள் மற்றும் விஜய்யின் அரசியல் நோக்கங்களை மக்களிடம் எடுத்துச் சொல்லும் பணியில் ஈடுபடுவார்கள் என கூறப்படுகிறது.
தமிழகத்தில் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை ஆண் வாக்காளர்களை விட அதிகமாக இருப்பது அரசியல் கட்சிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஒரு குடும்பத்தின் வாக்கு முடிவிலும் பெண்களின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால், பெண்களை மையமாகக் கொண்ட இந்த வியூகம் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
மேலும், ஆண்கள் நடத்திய பாரம்பரிய பிரச்சாரத்தை விட பெண்கள் நேரடியாக வீடு தேடி சென்று பேசும் போது மக்கள் மத்தியில் அதிக நெருக்கமும் நம்பிக்கையும் உருவாகும் என்ற கணக்கில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த பெண்கள் அணிகள் வெறும் தேர்தல் பணிக்காக மட்டும் அல்லாமல், பெண்களின் பாதுகாப்பு, கண்ணியம், சமூக முன்னேற்றம் போன்ற பிரச்சினைகளை மையமாகக் கொண்டு பிரச்சாரம் செய்யவும் பயிற்சி பெறுகின்றனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசியல் ஆய்வாளர்கள் கூறுவதாவது, எம்.ஜி.ஆர் காலத்திற்குப் பிறகு பெண்களின் பெரும் ஆதரவைப் பெறும் முயற்சியாக இந்தத் திட்டத்தை விஜய் முன்னெடுத்து வருகிறார். இதன் மூலம் மாநிலம் முழுவதும் வலுவான அடிப்படை அமைப்பை உருவாக்கவும் அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மொத்தத்தில், “தொகுதிக்கு ஆயிரம் பெண்கள்” என்ற இந்த திட்டம் வெற்றி பெற்றால், அது தமிழக அரசியலில் புதிய வகை தேர்தல் பிரச்சார முறைமையை உருவாக்கும் என அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன.
English Summary
Vijay targets women votes Women Army prepares to harvest votes Vijay magic trick