திருச்சியில் இன்று தொடங்கும் விஜய்யின் மக்கள் சந்திப்பு பிரசாரம்! - Seithipunal
Seithipunal


த.வெ.க. தலைவர் விஜய், சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், தனது மக்கள் சந்திப்பு பிரசாரத்தை இன்று (செப்.2) திருச்சியில் இருந்து தொடங்குகிறார். இந்த பிரசாரம் டிசம்பர் மாதம் வரை, ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற உள்ளது.

பிரசாரத்திற்காக நவீன வசதிகளுடன் கூடிய சிறப்பு பஸ் விஜய்யுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த பஸ்சில் தொண்டர்கள் ஏறுவதைத் தடுக்க, மேல்பகுதியில் இரும்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது. மேலும், பிரசாரத்துக்கு தேவையான உயர்தர கேமராக்கள், ஒலிப்பெருக்கிகள் பொருத்தப்பட்டுள்ளன.

விஜய், விமானம் மூலம் திருச்சி வந்து, அங்கிருந்து தனது பிரசார பஸ்சில் பயணம் செய்கிறார். அவரது வாகனம் பனையூரில் இருந்து நேற்று மாலை திருச்சியை நோக்கி புறப்பட்டது.

இன்று காலை 10.35 மணிக்கு, திருச்சி காந்தி மார்க்கெட் காவல் சரகம், மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை அருகே விஜய் தனது பிரசாரத்தை தொடங்குகிறார். இதைத் தொடர்ந்து பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களிலும் மக்கள் சந்திப்பை நடத்தவுள்ளார்.

அரியலூரில் நடைபெற உள்ள பிரசாரத்துக்கு போலீசார் 25 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளனர். தேர்தல் சூழ்நிலையில், விஜய்யின் மக்கள் சந்திப்பு பிரசாரம் அரசியல் வட்டாரத்தில் கணிசமான முக்கியத்துவத்தை பெற்றுள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vijay public meeting campaign begins today in Trichy


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு


செய்திகள்



Seithipunal
--> -->