தமிழக அரசியல் களத்தை அதிரவிடும் நடிகர் விஜய்!! - Seithipunal
Seithipunal


நடிகர் விஜய் 2026ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் களமிறங்க திட்டமிட்டு அதற்கான பணிகளை தனது விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மேற்கொண்டு வருகிறார். விஜய்யின் அடுத்தடுத்து நகர்வுகளால் தமிழக அரசியல் களம் அதிர்ந்து போய் உள்ளது. அதன் தாக்கம் லியோ பட விவகாரத்தில் எதிரொலித்ததாக அரசியல் விமர்சகர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் கடலூர் மாவட்டம் பெரிய கங்கணாங்குப்பம் பகுதியில் அகில இந்திய விஜய் மக்கள் இயக்க தொழிற்சங்க 3ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு 50 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அகில இந்திய விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் கலந்து கொண்டு 50 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த புஸ்சி ஆனந்த் கடலூரில் தற்போது மூன்றாவது ஆண்டாக விஜய் மக்கள் இயக்க தொழிற்சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. இதே போன்று கூடிய விரைவில் தமிழக முழுவதும் விஜய் மக்கள் இயக்க தொழிற்சங்கங்கள் தொடங்கப்பட உள்ளன. 

தளபதி விஜய் அறிவுறுத்தலின் பேரில் ஆட்டோ தொழிலாளர்களுக்கு வங்கிகள் மூலம் ஆட்டோ வாங்கி கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தமிழக முழுவதும் செயலி மூலம் நாள்தோறும் உறுப்பின சேர்க்கை நடைபெற்று வருகிறது. எத்தனை பேர் சேர்ந்துள்ளனர், எத்தனை உறுப்பினர்கள் உள்ளனர் என்பதை தளபதி விஜயின் அனுமதி பெற்று கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vijay makkal iyakkam planed to form workers union across TamilNadu


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->