சினிமாவில் மட்டுமே விஜய் கதாநாயகன்...நிஜத்தில் வில்லன்...! - தாராபுரத்தில் டிடிவி தினகரன் கடும் விமர்சனம் - Seithipunal
Seithipunal


தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், த.வெ.க. தலைவர் விஜய்யை கடுமையாக விமர்சித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். “சினிமாவில் மட்டுமே விஜய் கதாநாயகன்; நிஜ வாழ்க்கையில் அவர் வில்லனாக செயல்படுகிறார்” என்று அவர் விமர்சித்துள்ளார்.திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், தாராபுரம் இடைத்தேர்தல் மற்றும் த.வெ.க.வின் தேர்தல் நடவடிக்கைகள் குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்தார்.

அப்போது அவர் கூறியதாவது,"முதலமைச்சர் விஜய் தேர்தல் பிரசாரத்துக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அங்கும் இங்குமாக சென்று கொண்டிருக்கிறார். ஜோசியர் கூறினால், இரவு நேரத்திலும் பிரசாரம் செய்ய அவர் தயங்கமாட்டார். நாளையும் தாராபுரத்திற்கு வந்து சுற்றிச் செல்வார்.த.வெ.க.வுக்கு தற்போது தோல்வி பயம் ஏற்பட்டுவிட்டது.

அவர்களது கட்சியின் செயல்பாடுகளே அவர்களது தோல்விக்கு காரணமாக அமையும். இந்த இடைத்தேர்தலை திணித்ததே விஜய்தான். இதன் மூலம் தமிழக அரசியலில் தவறான முன்னுதாரணத்தை அவர் ஏற்படுத்தியுள்ளார்.தற்போது த.வெ.க. இரட்டை இலை சின்னத்திடம் சிக்கிக்கொண்டுள்ளது.

இந்த தேர்தலில் உறுதியான வெற்றியை பெறப்போவது இரட்டை இலைதான்.ஓட்டுக்கு பணம் கொடுக்கவில்லை என்று த.வெ.க.வினர் கூறி வருகின்றனர். ஆனால், சேலத்தில் பல தொகுதிகளில் பணம் வழங்கிவிட்டு, அதுகுறித்து பொய் தகவல்களை தெரிவித்து வருகிறார்கள்.அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் என்ன விஜய்யின் ரசிகர்களா? அல்லது விஜய் ரசிகர் மன்றங்களின் தலைவர்களா? அவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்குவதாக ஆசை காட்டி, த.வெ.க.வுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.தேர்தல் பிரசாரத்தின்போது சத்தியபாமா அழுதது நடிப்பு. விஜய் திரைப்படங்களில் மட்டுமே கதாநாயகனாக இருக்கிறார்.

ஆனால், நிஜ வாழ்க்கையில் அவர் மிகப்பெரிய வில்லனாக செயல்பட்டு வருகிறார் என்பதை அவருடைய நடவடிக்கைகள் நிரூபித்து வருகின்றன. இந்த தேர்தலில் அந்த உண்மை மக்களுக்கு வெளிப்படையாக தெரியவரும்.மக்கள் பணத்தை தொடமாட்டோம்; மக்கள் பணத்தை கையாடல் செய்பவர்களையும் விட்டுவைக்க மாட்டோம் என்று அவர்கள் கூறினார்கள்.

ஆனால், பதவிக்கு வந்த மூன்று மாதங்களிலேயே இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது?பட்டு வேட்டி, பட்டு சட்டை அணிந்து கொண்டு, சிறுவனைப் போல் வலம் வந்தபோது மக்கள் சற்று ஏமாந்து வாக்களித்துவிட்டார்கள். ஆனால், தற்போது நீங்கள் யார் என்பது மக்களுக்கு தெரிந்துவிட்டது. இந்த தேர்தலில் அது முழுமையாக வெளிச்சத்துக்கு வரும்.”இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vijay hero only in cinema but in reality he villain TTV Dhinakaran harshly criticizes Dharapuram


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?




சினிமா

Seithipunal
--> -->