மோடி ஜாதகத்தின் ஜெராக்ஸ் காப்பி விஜய் ஜாதகம்! விஜய்க்கு பிரதமர் ஆகும் யோகம் கூட இருக்கு! ஜோதிடர் ரத்தன் பண்டிட் பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


தமிழக முதலமைச்சர் விஜய்யின் ஜோதிடராக அறியப்படும் ரத்தன் பண்டிட் வெற்றிவேல், விஜய்யின் அரசியல் எதிர்காலம் குறித்து பரபரப்பான கருத்துகளை வெளியிட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் ஜாதகத்துடன் விஜய்யின் ஜாதகத்தை ஒப்பிட்டு பேசிய அவர், எதிர்காலத்தில் விஜய் பிரதமராக கூட வர வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

முதல்வர் விஜய்யின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக ரத்தன் பண்டிட் வெற்றிவேல் நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால் அந்த நியமனத்திற்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்புகள் எழுந்ததைத் தொடர்ந்து, தமிழக அரசு அந்த உத்தரவை ரத்து செய்தது. இதுகுறித்து விளக்கம் அளித்த ரத்தன் பண்டிட், “எனக்கு அந்த பதவி வழங்கப்பட்டதே முதலில் தெரியாது. பின்னர் அது ரத்து செய்யப்பட்டதும் பெரிய வருத்தம் இல்லை. விஜய்யின் அன்பு வட்டத்தில் இருப்பதே எனக்கு போதுமானது” என்றார்.

மேலும், “விஜய்க்கு ஜோதிடத்தில் பெரிய நம்பிக்கை இல்லை. அவர் தீவிர முருக பக்தர். 2017-லேயே விஜய் தமிழகத்தை ஆளும் நிலைக்கு வருவார் என்று நான் கூறியிருந்தேன்” என தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து அவர் கூறிய கருத்துதான் தற்போது அதிக கவனம் பெற்றுள்ளது. “பிரதமர் மோடியின் ஜாதகத்தின் ஜெராக்ஸ் காப்பி மாதிரி தான் விஜய்யின் ஜாதகம் இருக்கிறது. மோடியின் ஜாதகத்தில் உள்ள பல அம்சங்கள் விஜய்யிடமும் உள்ளன. மோடிக்கு பிறகு நாட்டில் உருவாகும் அரசியல் சூழலில், விஜய் பிரதமராக வரக்கூடிய வாய்ப்பு இருக்கிறது” என்று கூறினார்.

மேலும், “விஜய்க்கு தோல்வி முகம் இல்லை. அடுத்த 40 முதல் 50 ஆண்டுகள் வரை அரசியலில் மிகப்பெரிய செல்வாக்குடன் இருப்பார். இந்தியாவைத் தாண்டி உலகம் போற்றும் தலைவராகவும் உருவெடுப்பார்” எனவும் அவர் தெரிவித்தார்.

ரத்தன் பண்டிட்டின் இந்த பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. விஜய் ரசிகர்கள் இதனை உற்சாகமாக பகிர்ந்து வரும் நிலையில், அரசியல் வட்டாரங்களிலும் இந்த கருத்துகள் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vijay has the potential to become the Prime Minister Astrologer Ratan Pandit sensational interview


கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..




Seithipunal
--> -->