தேர்தல் களத்தில் விஜய் சோலோ...? - திருமாவளவன் முக்கிய அறிவிப்பு
Vijay entering election arena solo Thirumavalavan important announcement
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து அரசியல் நிலவரம் குறித்து பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது,"பாஜகவின் பிடிக்குள் அதிமுக முழுமையாக சிக்கி விட்டது.

அதிமுகவின் நிலை நினைத்து நாங்கள் உண்மையிலேயே கவலைப்படுகிறோம். தேசிய ஜனநாயகக் கூட்டணி இன்று அதிமுக தலைமையில்தான் இயங்குகிறது என்று கூற முடியாத அளவுக்கு சூழல் மாறி விட்டது.
யார் தலைமை வகிக்கிறார்கள் என்பதையே தெளிவாகச் சொல்ல முடியாத குழப்பம் நிலவுகிறது.இது அதிமுகவுக்கு வருங்காலத்தில் மிகப்பெரிய அரசியல் பின்னடைவாக அமையும்.
விஜய் எங்கும் பாஜகவை நேரடியாக தாக்கவில்லை; ‘பாஜக கொள்கை எதிரி’ என்று மட்டுமே குறிப்பிடுகிறார். அவர் தனித்தோ அல்லது புதிய கூட்டணியை அமைத்தோ தேர்தலை எதிர்கொள்வார்" என தெரிவித்தார்.
English Summary
Vijay entering election arena solo Thirumavalavan important announcement