இஸ்லாமியர்களை இழுவுபடுத்திய மாநாடு படத்தை தடை செய்ய வேண்டும்.!  - Seithipunal
Seithipunal


மாநாடு படத்தை தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என்று, தமிழ்நாடு ஏகத்துவ பிரசார ஜமா அத் என்ற அமைப்பின் தலைவர் வேலூர் இப்ராஹிம் கோரிக்கை வைத்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் அளித்துள்ள பேட்டியில், "சிலம்பரசன் நடித்த மாநாடு திரைப்படத்தை நேற்று பார்த்தேன். அந்த திரைப்படம் தமிழகத்தினுடைய சட்ட ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் மிக மோசமான கருத்துகளை உள்ளடக்கியதாக உள்ளது.

குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் அந்த திரைப்படத்தில் வரக்கூடிய காட்சிகள் காவல்துறையை மிகக் கேவலமாக இழிவு படுத்தக் கூடியதாக அமைந்திருக்கிறது. அண்மையில் வரும் அனைத்து திரைப்படங்களும் காவல்துறையின் மாண்பை குறைக்கும் வகையில் வெளிவந்துள்ளது.

சூர்யா நடிப்பில் வெளிவந்த ஜெய்பீம் திரைப்படத்தில் காவல்துறையினர் பட்டியல் இன மக்களையும், பிற்படுத்தப்பட்ட மக்களையும் மிக வக்கிரமாக கையாளுகிறார்கள் என்றும், ஒரு சாதியில் இருக்கக்கூடிய காவல்துறையினர் அடித்தட்டு இருளர் இன மக்களை மிக கேவலமாக நடத்துகிறார்கள் என்பது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டு, அது மிகப்பெரிய சர்ச்சைக்குள்ளாகிது. 

இறுதியில் அந்தப் படத்தினுடைய இயக்குனர் மன்னிப்பு கேட்ட விவரம் அனைவருக்கும் தெரியும். இந்நிலையில், மாநாடு திரைப்படத்தில் காவல்துறையினர் தீவிரவாதிகளை உருவாக்குவது போன்று கட்டமைத்து உள்ளனர்.

கோவை குண்டு வெடிப்பு நடந்து இருபது ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அதே கோவை மாநகரத்தில் மிகப்பெரிய ஒரு கலவரத்தை ஏற்படுத்துவது போன்றும், அந்த கலவரத்தில் அப்பாவி இஸ்லாமியர்களை பயன்படுத்தி காவல்துறையினர் தீவிரவாதிகளாக காட்டுவது போன்றும், ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் போன்று அவர்களை காவல்துறையை வைத்து திட்டத்தை உருவாக்குவது போன்ற ஒரு மோசமான காட்சி அதில் அமைத்திருக்கிறார்கள்.

ஏற்கனவே கோவையில் உள்ள பல்வேறு அடிப்படைவாத இஸ்லாமிய அமைப்புகள், இஸ்லாமிய இளைஞர்களை காவல்துறையினருக்கு எதிராக திட்டமிட்டு வழிநடத்தும் இந்த நேரத்தில், ஒரு சில இஸ்லாமிய இளைஞர்கள் அதன் மூலமாக வன்முறைத் தாக்குதலுக்கு தயாராகி கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில், எங்களைப் போன்றவர்கள் இஸ்லாமிய மக்களை நெறிப்படுத்துதிக் கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில், திட்டமிட்டு அடிப்படைவாத சக்திகள், தீவிரவாத சக்திகள், இஸ்லாமியர்களுக்கு எதிராக காவல்துறை செயல்படுகிறார்கள் என்றும், இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக அவர்கள் தான் உருவாக்குகிறார்கள் என்ற பிரச்சாரத்தை, இந்த விஷமத்தனமான கருத்தை மாநாடு திரைப்படத்தில் சிம்பு நடித்து காட்டியிருக்கிறார்.

இதைப் பார்க்கக் கூடிய இஸ்லாமிய மக்கள் என்ன நினைப்பார்கள் என்றால்., இஸ்லாமியர்களை காவல்துறையினர் தான் தீவிரவாதிகளாக காட்டுகிறார்கள்., அதனை நான் தடுக்க வந்துள்ளதாக நாயகன் சிம்பு நடித்து இருக்கிறார் என்று நினைப்பார்கள்.

காவி வேஷ்டி அணிந்தவர்களை வன்முறையாளர்களாக அந்த திரைப்படத்தில் காட்டி இருக்கிறார்கள். தொப்பியும், தாடியும் உள்ள இஸ்லாமியர்களை வன்முறையாளர்களாக காட்டக்கூடிய காட்சியும், மத அடையாளங்களை கொச்சைப்படுத்துவது போன்றும் இந்த திரைப்படத்தில் காட்சிகள் அமைந்துள்ளது. இது போன்ற ஆபத்தான திரைப்படத்தை இங்கே இருக்கக்கூடிய இந்துக்களுக்கும், இஸ்லாமிய மக்களுக்கும் இடையான ஒரு கலவரத்தை ஏற்படுத்தவே இந்த படம் அமைந்துள்ளது.

இந்தப் படம் முழுக்கவே வன்முறைக் களமாக உள்ளது. இந்த படத்தை காட்சிகளை நீக்காமல் சர்ச்சைக்குரிய காட்சிகளை அமைத்து, அப்படியே வெளியிடப்பட்டுள்ளது என்பது தான் புரியாத புதிராக உள்ளது. தமிழக முதல்வர் இந்தப்படத்தில் தலைப்பட்டு படத்தில் வரக்கூடிய இஸ்லாமியர்களின், இந்துக்களையும் அவர்களது அடையாளங்களோடு வன்முறையாளர்கள் காட்டக்கூடிய அந்த காட்சிகளை நீக்க வேண்டும். காவல்துறையினர் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்து ஆபத்தான கருத்தை நீக்க வேண்டும்" என்று வேலூர் இப்ராஹிம் கோரிக்கை வைத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

VelloreI brahim say about maanadu


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->