டெல்டாவில் ஹைட்ரோ கார்பன் எண்ணெய் கிணறு வேண்டும் - ஓஎன்ஜிசிக்கு ஆதரவாக விசிக, கம்னியூஸ்ட், அமமுக பேரணி.! - Seithipunal
Seithipunal


திருவாரூர் மாவட்டத்தில் கமலாபுரம், ஏற்காட்டூர், கலப்பால், அடியக்கமங்கலம், பெரிய குடி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் எண்ணெய் கிணறு அமைத்து ஹைட்ரோ கார்பன் எடுக்கும் பணிகளை ஓஎன்ஜிசி நிர்வாகம் மேற்கொண்டு வந்தது. 

இந்த நிலையில் ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் பெரியகுடி எண்ணெய் கிணறை நவீன கருவிகளுடன் சரியான முறையில் மூட வேண்டும் எனவும், அந்த எண்ணை கிணற்றில் வேறு எந்த பணிகளையும் மேற்கொள்ள கூடாது எனவும் உத்தரவிட்டிருந்தார்‌.

இதனை தொடர்ந்து திருவாரூரில் ஓஎன்ஜிசிக்கு ஆதரவாக 500-க்கும் மேற்பட்டோர் பேரணியாக சென்று, துரப்பன பணிகளை உடனே தொடங்கிட ஓ.என்.ஜி.சி நிறுவனத்தை அனுமதிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். 

அந்த மனுவில், ஒப்பந்த தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயத்தில் இருப்பதாகவும், ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு எதிராக ஆதாரமற்ற அவதூறு குற்றச்சாட்டுகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. 

மேலும், இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை பேரணியாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த பேரணியில் விசிக, அமமுக தொண்டர்களும் பங்கேற்றனர்.

இந்த பேரணியை திருவாரூர் புதிய பேருந்து நிலையத்தில் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் தொடங்கி வைத்தார்.

செய்தி உதவி : தந்தி டிவி 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vck cpi ammk support to ONGC


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->