வரும் சட்டமன்றத் தேர்தலில் பாமக ஆட்சி அமைக்கும்.? வைகோ பேட்டி.!! - Seithipunal
Seithipunal


குஜராத் மீனவர்களுக்கு பிரச்சனை என்றால் மத்திய அரசு துடிக்கிறது. தமிழக மீனவர்கள் பிரச்சினை என்றால் மௌனமாக இருக்கிறது என வைகோ தெரிவித்துள்ளார். 

செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வைகோ, பிரதமர் நரேந்திர மோடி பாராளுமன்றத்திற்கு வருவதில்லை. அவ்வாறு வந்தாலும் இருக்கைக்கு வருவதில்லை. ஜனநாயகத்தைப் பற்றி பேசிக் கொண்டே ஜனநாயகத்தை நசுக்கும் செயலில் ஈடுபடுகிறார். குஜராத் மீனவர்கள் பிரச்சினை என்றால் மத்திய ராசு துடிக்கிறது. தமிழக மீனவர்களுக்கு பிரச்சினை என்றால் மௌனமாக இருக்கிறது.

அதேபோல, 7 தமிழர் விடுதலையில் பாஜக இரட்டை வேடம் போடுகிறது. தமிழகத்திற்கு கேடுவிளைவிக்கும் பாதகமான செயலை மத்திய அரசு செய்கிறது. தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிப்பது குறித்து கூட்டணி கட்சிகளுடன் ஆலோசித்து முடிவெடுப்போம். 2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக வலுவான அணியை கட்டமைக்க வேண்டும். 

பாமகவின் தேர்தல் நிலைப்பாடு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த வைகோ, வரும் சட்டமன்ற தேர்தலில் தனி அணி அமைப்போம். ஆட்சியை அமைப்போம் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறுவதில் தவறு எதுவுமில்லை என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

vaiko press meet about pmk


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->