யார்கிட்ட! திமுகவில் வைகோ மாதிரி டம்மி வாய்ஸ்-சாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை...! - நயினார் நாகேந்திரன்
Vaiko like dummy voice in DMK There is no need to be dead Nainar Nagendran
பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்கள், விருதுநகர் மாவட்டம் செல்வதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்து தரை இறங்கினார்.மேலும் விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,"டீசல், பெட்ரோல் போடுவதிலேயே தமிழக அரசு கோடிக்கணக்கான ரூபாய் பாக்கி வைத்துள்ளார்கள்.

அரசாங்கம் போக்குவரத்து மானியம் கொடுத்து அதை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இது முதலமைச்சர் செய்ய வேண்டிய வேலை.இன்றைக்கு முதலமைச்சரை பொருத்தமட்டில் எப்போது அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைந்ததோ அப்போது இருந்தே அவருக்கு ஜுரம் வந்துவிட்டது.
தோல்வி பயம் வந்துவிட்டது. கூட்டணி கட்சித் தலைவர்களும் அதே மாதிரி தான் பேசுவார்கள்.அம்பாசமுத்திரத்தில் ஒரு 17 வயது சிறுமியை போதை பழக்கமுடையவர் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். வள்ளியூரில் ஒரு மூதாட்டி 17 பவுன் நகைக்காக கொலை செய்யப்பட்டிருக்கிறார்.
தினசரி இதுபோன்ற சட்ட ஒழுங்கு பிரச்சனை உள்ளது. போதைப்பொருள்கள் நடமாட்டம் உள்ளது. இதை மறைப்பதற்காக முதல்வர் ஓரணியில் தமிழ்நாடு என்கிற பெயரில் ஊர் ஊராக செல்கிறார். இதனால் எந்த நன்மையும் இல்லை. இன்று தி.மு.க. அரசு வெகுஜன மக்களின் விரோத ஆட்சியாக உள்ளது.
நிச்சயமாக 2026 தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்.முதலமைச்சருக்கு இப்போது என்ன பேசுவது என்று தெரியவில்லை. முன்னாள் முதல்வர் பழனிசாமி அவர்கள் பேச வேண்டிய கருத்தைதான் பேசியிருக்கிறார். கூட்டணியில் நாங்கள் இருக்கிறோம், டம்மி வாய்ஸாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. வைகோ எப்போதும் அதிகம் கோபப்படக் கூடியவர். கூட்டத்தில் இருக்கும்போது சத்தம் போடுவது எல்லா இடங்களிலும் செய்கிறார்"என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Vaiko like dummy voice in DMK There is no need to be dead Nainar Nagendran