அவரின் "ரத்த அணுக்களிலும் இஸ்லாமிய வெறுப்பு".. மோடியை சாடிய வைகோ.!! - Seithipunal
Seithipunal


இஸ்லாமியர்கள் குறித்து நரேந்திர மோடி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது கண்டனத்தை பதிவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "ராஜஸ்தானில் நடைபெற்ற பாஜக பிரசாரத்தில் இஸ்லாமிய வெறுப்பை வெளிப்படுத்தி உள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

இஸ்லாமியர்கள் மீதான பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சு உலகின் பல்வேறு நாடுகளில் கண்டனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.

பிரதமர் மோடி இப்படி பேசி இருப்பது அவரது சிந்தையில் நிறைந்திருக்கும் ஆர்எஸ்எஸ் கோட்பாட்டை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது

பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் பிரதமர் என்ற உயர்ந்த இடத்திற்கு வந்த பிறகும் தனது ரத்த அணுக்களில் ஊடுருவியுள்ள இஸ்லாமிய வெறுப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

பிரதமர் மோடியின் வெறுப்புப் பேச்சுக்களை தேர்தல் ஆணையம் வேண்டுமானால் கண்டுகொள்ளாமல் இருக்கலாம். ஆனால் நாட்டின் மக்கள் மக்களவைத் தேர்தலில் சரியான பாடம் புகட்டுவார்கள். ஆட்சி அதிகாரத்திலிருந்து பாஜக தூக்கி எறியப்படும் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன” எனக் குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vaiko condemned Narendra Modi hate speech on Muslims


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->