உ.பி சட்டப்பேரவை தேர்தல்: இன்று 6ம் கட்ட வாக்குப்பதிவு துவக்கம்.! - Seithipunal
Seithipunal


உத்திரப்பிரதேச மாநிலத்தில் 403 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் 5 கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், இன்னும் 2 கட்ட வாக்குப்பதிவு மட்டுமே உள்ளது.

இதுவரை 403 தொகுதிகளில் 292 தொகுதிகளுக்கு தேர்தல் முடிவடைந்துள்ளது. இன்னும் 111 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

இதில், 57 தொகுதிகளுக்கான 6ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. இந்த 57 தொகுதிகளில் 676 பேர் போட்டியிடுகின்றனர். மேலும் இந்த தொகுதிகளில் 2.14 கோடி பேர் வாக்காளர்கள் உள்ளனர்.

உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் முதல்முறையாக சட்டப்பேரவைத் தேர்தலில் களமிறங்க உள்ள கோரக்பூர் தொகுதியும் இன்றைய தினம் வாக்குப்பதிவு நடைபெறகிறது. மேலும் கடந்த தேர்தலில் இந்த 57 தொகுதிகளில் 46 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Uttar Pradesh assembly election 6th phase polling


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->