“வேற்றுமையில் ஒற்றுமை” - 77-வது குடியரசு தின வாழ்த்து வழங்கிய தவெக தலைவர் விஜய் - Seithipunal
Seithipunal


நாட்டின் 77-வது குடியரசு தின விழா இன்று நாடெங்கும் தேசிய பெருமிதத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த சிறப்பு நாளை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் நாட்டு மக்களுக்கு வாழ்த்துச் செய்திகள் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வரிசையில், தவெக தலைவர் விஜய் குடியரசு தினத்தை முன்னிட்டு தனது எக்ஸ் (X) தளத்தில் கருத்து பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் தெரிவித்திருப்பதாவது,"வேற்றுமையில் ஒற்றுமை எனும் உயரிய கோட்பாட்டின் அடிப்படையில் உருவான இந்தியக் குடியரசுக்கு அடித்தளம் அமைத்த அனைவரையும் இந்த நாளில் நன்றியுடன் நினைவுகூர்வோம்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த இந்தப் பெருமைமிக்க நாளில், அதன் மாண்பையும் மரியாதையையும் காக்க உறுதி மொழி ஏற்றுக் கொள்வோம்.

அனைவருக்கும் மனமார்ந்த குடியரசு தின நல்வாழ்த்துகள்".இவ்வாறு அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Unity in diversity tvk leader Vijay extends greetings 77th Republic Day


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->