நாட்டின் நம்பர் 1 டுபாக்கூராக மாறி நிற்கும் முதலமைச்சருக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்... கடுமையாக விமர்சித்த உதயநிதி ஸ்டாலின்!
Udhayanidhi Stalin Criticizes TVK Govt Over High-Cost Power Procurement
தமிழ்நாட்டில் நிலவும் மின்சாரத் தேவையைச் சமாளிக்க வெளிச்சந்தையில் இருந்து ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35 என்ற அதிகபட்ச விலைக்குக் கொள்முதல் செய்யத் தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் அறிவித்துள்ளார்.
அரசின் இந்த முடிவை திமுக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பதிவில் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேலும் அவரது பதிவில், திமுக ஆட்சிக் காலத்தில் குறைந்த விலைக்கு மின்சாரம் வாங்கியதை முறைகேடு என்று கூறி டெண்டரை ரத்து செய்த இந்த அரசு, தற்போது மிக அதிக விலையான ரூ.35 கொடுத்து மின்சாரத்தை வாங்க இருக்கிறது.
இந்தியாவிலேயே தமிழகம் மட்டுமே இவ்வளவு அதிக விலைக்கு மின்சாரம் வாங்குவது, தற்போதைய முதலமைச்சரின் நிர்வாகத் திறனின்மையையே காட்டுகிறது.
'காற்றடிக்கவில்லை, மழை வரவில்லை, பஞ்சாப்பில் பவர் கட்' என்றெல்லாம் கட்டுக்கதைகளைச் சொல்லி இத்தனை நாட்களாகச் செயற்கையான மின் தட்டுப்பாட்டை உருவாக்கியது இந்த ஊழல் ஒப்பந்தத்தை முடிப்பதற்காகத் தானா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஏற்கெனவே மின்கட்டணம் என்ற பெயரில் மக்களை வதைக்கும் இந்த அரசு, அதிக விலைக்கு மின் கொள்முதல் செய்து அந்தப் பாரத்தையும் பொதுமக்கள் தலையிலேயே கட்டப் பார்க்கிறது.
மாற்றம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்து நாட்டிலேயே நம்பர் 1 டுபாக்கூராக மாறி நிற்கும் இந்த முதலமைச்சருக்கு பொதுமக்கள் விரைவில் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று உதயநிதி ஸ்டாலின் சாடியுள்ளார்.
English Summary
Udhayanidhi Stalin Criticizes TVK Govt Over High-Cost Power Procurement