#Breaking :: உதயநிதியின் முடிசூட்டு விழாவுக்கு நாள் குறித்த திமுக..!! ஆளுநரிடம் நேரம் கேட்டுள்ளதாக தகவல்..!! - Seithipunal
Seithipunal


திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக அடையாளமாக உதயநிதி ஸ்டாலின் முன்னிறுத்தப்படுவதால் அவருக்கு அமைச்சர் பதவி வேண்டும் என அன்பில் மகேஷ் போன்ற அமைச்சர்கள் வலியுறுத்தி வந்தனர். அதேபோன்று இளைஞரணியை சேர்ந்த நிர்வாகிகளும், திமுக தொண்டர்களும் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் வரும் டிசம்பர் 16ஆம் தேதிக்கு முன்பு தமிழக அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. வரும் டிசம்பர் மாதம் 16ஆம் தேதி அசுபமாக கருதப்படும் மார்கழி மாதம் தொடங்க உள்ளதால் அதற்கு முன்பே பதவியேற்பு விழா நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மார்கழி மாதம் தொடங்க இன்னும் பத்து நாட்களே இருப்பதால் அதற்கு முன்பே இது குறித்தான அறிவிப்பு வெளியாகி பதவி ஏற்பு விழா நடைபெற வாய்ப்புள்ளது.

இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலினின் பதவி ஏற்பு விழா வரும் டிசம்பர் 12ஆம் தேதி நடத்த திமுக திட்டமிட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியிடம் நேரம் ஒதுக்கும் படி தமிழக அரசு சார்பில் கேட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்னும் ஓரிரு நாட்களுக்குள் இது குறித்தான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Udhayanidhi going to take up the post as Minister on Dec12


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->