கேரளா சட்டமன்ற தேர்தல் முடிவுகள்; பினராயி விஜயன் பின்னடைவு; 82 இடங்களில் UDF முன்னிலை..!
UDF Leads in 82 Seats in the Kerala Assembly Elections
கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான UDF பெரும்பான்மை எல்லையைக் கடந்து 82 தொகுதிகளை கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது.
கேரளா மாநிலத்தில் மொத்தமுள்ள 140 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 09ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் முடிவடைந்த நிலையில், தற்போது வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இங்கு ஆட்சியமைக்க 71 இடங்கள் தேவை என்கிற நிலையில், தற்போதைய நிலவரப்படி UDF முன்னிலை பெற்றுள்ளது.
கேரளாவில் இரண்டு முக்கிய கூட்டணிகளான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி (LDF) க்கும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) க்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் கூட்டணி 82 இடங்களிலும், இடதுசாரி ஜனநாயக முன்னணி 45 இடங்களிலும் முன்னிலையில் இருக்கிறது. தர்மடம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலை பெற்றுள்ளதால் பினராயி விஜயன் பின்தங்கியுள்ளார்.
English Summary
UDF Leads in 82 Seats in the Kerala Assembly Elections