மக்களை ஏமாற்றி வாக்குகள் பெற உள்ளர்: பிரதமரை சாடிய உதயநிதி ஸ்டாலின்! - Seithipunal
Seithipunal


அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஈரோடு நாடாளுமன்ற தொகுதி வேட்பாளரை ஆதரித்து இன்று பிரசாரத்தில் ஈடுபட்டார் அப்போது அவர், 

வருகின்ற 19ஆம் தேதி வாக்கு பதிவு நடைபெற உள்ளது. வாக்கு பதிவு பெட்டியில் மூன்றாவது இடத்தில் உதயசூரியன் சின்னம் உள்ளது. ஆனால் ஜூன் நான்காம் தேதி நம் நாம் முதலிடத்தில் வரவேண்டும். 

நீங்கள் போடும் ஓட்டு மோடிக்கு வைக்கும் வேட்டு. இங்கு மஞ்சள் ஆராய்ச்சி மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எண்ணற்ற பணிகள் இந்த பகுதியில் நடைபெற்று வருகிறது. 

இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் கேஸ்  ரூ. 500 க்கு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்கள். பா.ஜ.கவுடன் நான்கு வருடங்கள் கூட்டணியில் இருந்து விட்டு தமிழ்நாட்டின் உரிமைகள், மொழி, நிதி, கல்வி போன்ற உரிமையை எடப்பாடி பழனிச்சாமி இழந்தார். 

தமிழ்நாட்டின் உரிமைகளை மத்திய அரசிடம் அடகு வைத்து விட்டார். கலைஞரை இருந்த பொழுது நீட் தமிழகத்திற்குள் வரவில்லை. 

ஆனால் எடப்பாடி பழனிச்சாமி பா.ஜ.கவிற்கு பயந்து நீட் தேர்வை தமிழகத்திற்குள் கொண்டுவந்தார். தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு நீட் தேர்வு ரத்து செய்வதற்கு சட்டரீதியான போராட்டம் நடைபெற்று வருகிறது. 

பிரதமர் மோடி 10 ஆண்டுகளாக தமிழகம் வராமல் இப்பொழுது தமிழகத்தை சுற்றி சுற்றி வருகிறார். தேர்தலுக்காக மக்களை பிரதமர் ஏமாற்றி வாக்குகளை வாங்க இருக்கிறார் என விமர்சித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Udayanidhi Stalin says PM get votes people deceive 


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->