திமுக அமைச்சருக்கு பணமலை! விஜய்க்கு மன்னிப்பு கடித்ம் எழுதிய TVK மாவட்ட செயலாளர்!
TVK DS Apology to Tamilaga Vettri Kazhagam Vijay
தமிழக வெற்றிக் கழகத்தின் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் பாரதிதாசன், கடந்த 8ம் தேதி புதுமனை புகுவிழா நடத்தினார். விழாவிற்கு அமைச்சர் எ.வே.வேலுவை அழைத்திருந்த அவர், அவருக்கு ரூ.20 நோட்டுகளால் செய்யப்பட்ட மாலை அணிவித்து வரவேற்றார்.
இது தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து, தி.மு.க.வையும் தமிழக அரசையும் கடுமையாக விமர்சிக்கும் நடிகர் விஜயின் கட்சிக்குள் எதிர்வினை எழுந்தது. "தி.மு.க. அமைச்சரை வரவேற்றது ஏன்?" எனக் கேள்விகள் எழுந்ததுடன், சிலர் கட்சி தலைவருக்கு எழுத்து வழியாக புகார் தெரிவித்தனர்.
இந்த விவகாரம் பற்றி கட்சி தலைமை பாரதிதாசனிடம் விளக்கம் கேட்டது. இதையடுத்து அவர், த.வெ.க. தலைவர் விஜய்க்கு மன்னிப்பு கோரி கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், "திருவண்ணாமலையில் நான் கட்டியிருக்கும் புதிய வீட்டு புதுமனை புகுவிழா கடந்த 8-ந்தேதி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, நண்பர்கள், கட்சியினர் உள்ளிட்டோரை அழைத்தது போல், என்னுடைய குடும்ப நண்பரான அமைச்சர் வேலுவையும் அழைத்தேன். அவரும் வருகை தந்தார்.
அமைச்சர் என்பதால், அவருக்கு மரியாதை செய்யும் வகையில் 20 ரூபாய் நோட்டு மாலையும், மலர் மாலையும் அணிவித்தேன். அச்செயலுக்காக வருந்துகிறேன். அதற்காக தலைவரிடம் மன்னிப்பு கோருகிறேன்.
இனி வரும் காலங்களில் என் சம்பந்தப்பட்ட விழாக்களில் நம் கழக சொந்தங்கள் தவிர வேறு எந்த மாற்றுக்கட்சி நிர்வாகிகளையும் அழைக்க மோட்டேன்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
TVK DS Apology to Tamilaga Vettri Kazhagam Vijay