ஏழை, எளிய மக்களின் வயிற்றில் அடிக்கப்போகும் திமுக அரசு.. வெளி வேஷம் போடும் முதல்வர் ஸ்டாலின்.. சட்டப்பேரவையில் அனைத்தும் அம்பலம்.!! - Seithipunal
Seithipunal


அம்மா உணவகத்தை மூடினால்தான் என்ன? என பேரவையில் அமைச்சர் துரைமுருகன் ஆவேசமாக பேசினார். திமுக ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட பல திட்டங்களை அதிமுக அரசு மூடியது, நாங்கள் ஒரு திட்டத்தை மூடினால் என்ன தவறு? என் அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

இந்நிலையில், இது குறித்து டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அம்மா உணவகங்களை மூடினால் என்ன?’ என்று சட்டப்பேரவையிலேயே தி.மு.க.வின் மூத்த அமைச்சர் பேசியிருப்பது அக்கட்சியின் அப்பட்டமான அரசியல் காழ்ப்புணர்ச்சியையே காட்டுகிறது. 

இதன்மூலம், ‘அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும்’ என முதலமைச்சர் திரு.ஸ்டாலின் முன்பு கூறியிருந்தது வெறும் வெளிவேஷம் என்பது அம்பலமாகியிருக்கிறது. வழிவழியாக வரும் தி.மு.க.வின் மக்கள் விரோத செயல்பாடுகளின் தொடர்ச்சிதான் அமைச்சரின் இந்தப் பேச்சு.

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் மீதான அரசியல் வெறுப்புணர்வால், அம்மா உணவகங்களை மூடி அவற்றால் பசியாறும் ஏழை, எளிய மக்களின் வயிற்றில் அடிக்க வேண்டாம் என தி.மு.க. அரசைக் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ttv dinakaran says about amma unavagam


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->