வெளியான செய்தி.. அதிர்ச்சியில் டிடிவி தினகரன்.!! - Seithipunal
Seithipunal


கூடலூர் அருகே உள்ள தேவாலா போக்கர் காலனி பகுதியில் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவித்ததால் மூடப்பட்ட தார் கலவை இயந்திரம் மீண்டும் இயக்க அனுமதி அளிக்கப் போவதாக வரும் செய்திகள் அதிர்ச்சி அளிப்பதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள தேவாலா போக்கர் காலனி (Poker colony) பகுதியில் சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவித்ததால் முடக்கப்பட்ட தார் கலவை இயந்திரத்தை (Tar mixing plant) மீண்டும் இயக்க அனுமதி அளிக்கப் போவதாக வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன.

மக்களுக்குப்  பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதால் மூடப்பட்டதை  மீண்டும் திறக்க வேண்டிய அவசியம் என்ன? மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் நீலகிரி மாவட்ட ஆட்சியரும் இதுகுறித்து உரிய விளக்கம் அளிப்பதுடன், அந்த இடத்தில் மீண்டும் தார் கலவை எந்திரம் செயல்படாது என்ற உறுதியையும் பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TTV Dinakaran Satement for Tar mixing plant


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->